ஜெயாவுக்காக கட்ட வேண்டிய அபராதம் நூறு கோடியில் ஆறு கோடியை நிலத்தையும் கிணத்தையும் விற்று திரட்டுகிறேன் – ஓபிஎஸ் கண்ணீர் பேட்டி

232

சென்னை /பெரியகுளம்: தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகேயுள்ள கோம்பை அடிவாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் 200அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணறு தோண்டியதால் அருகிலுள்ள லட்சுமிபுரத்தின் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கப்பட்டதாகக் கூறி, இந்த கிணற்றை ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்டமாக நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்தை நடந்தது.

தேனியிலுள்ள விருந்தினர் மாளிகையில் கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் உள்ளிட்ட கிராம குழுவினர் 10 பேர், ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 10.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. பேச்சுவார்தை தொடங்கியவுடன் முதலில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு முழுமையாக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் வைகை அணைநீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வட புதுப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை நீட்டிப்பு செய்து லட்சுமிபுரத்துக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறேன். இதற்காக ரூ.75 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம். இதற்கு சம்மதிக்காவிட்டால் நிலத்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். கிணறு இல்லாமல் வெறும் நிலத்தை வைத்து விவசாயம் செய்யமுடியாது. கிணற்றுடன் சேர்த்து நிலத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள். இது குறித்து 90 நாட்களுக்குள் முடிவு சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் வேறு யாருக்காவது நிலத்தை விற்றுவிடுகிறேன் என்று கூறிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்த கிராம குழுவினர் அவர்களுக்குள் பேசி முடிவெடுக்க ஏதுவாக சிறிது நேரம் விருந்தினர் மாளிகையின் வெளியில் வந்து தர்மயுத்தம் செய்வது போல் அமைதியாக நின்றார்.

லட்சுமிபுரம் அருகே கோம்பை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் உள்ள கிணறுதான் பிரச்சனைக்குரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையில் கிணற்றுக்குகூட பணம் தரவேண்டாம். நிலத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளுங்கள் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சென்ட் இடம் ரூ.15 ஆயிரம் என அப்பகுதியின் மதிப்பாக உள்ளது. இதன்படி ஒரு ஏக்கர் ரூ.15 லட்சம் என்றால், மொத்த நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடியாகும். கிராம மக்கள் நிலத்தை வாங்கிக்கொள்வதாக இருந்தால் என்னை எதிர்பார்க்க வேண்டாம், பவர் பத்திரம் எழுதிக்கொடுக்க சொல்கிறேன். நீங்கள் என் வழக்கறிஞரை தொடர்புகொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும் கப்சா நிருபரிடம் கூறும்போது “தர்மயுத்தம் ஆரம்பித்த நாளிலிருந்து எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாடு போன்ற சொத்துக்களை கபளீகரம் செய்வதில் எந்த நிலைப்பாடு வைத்திருந்தாரோ, அதே நிலைப்பாட்டுடன் நாங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். மானத்தோடு மரியாதையையும் இழந்து மோடியிடம் எங்கள் பவரை ஒப்படைத்ததை போல கிணற்றோடு சேர்த்து நிலத்தையும் கிராமத்தினருக்கு விற்க அல்லது பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

பணத்தை எதிர்பார்க்காது பெருந்தன்மையுடன் லட்சுமிபுரம் கிராமமக்களுக்கு கிணற்றை தானமாக வழங்கியிருந்தால், முன்னாள் தல்வர் என்ற முறையில் தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் உயர்ந்த இடம் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதா செத்தும் கட்ட வேண்டிய நூறு கோடியில் ஆறு கோடியை தேற்றவே நிலத்தை விற்கிறேன் என்று சொன்னேன். ஆறு கோடி ரூபாய் கொடுத்து எப்படி கிராம மக்களால் வாங்க முடியும்? அப்படியே அவர்கள் கஷ்டப்பட்டு 6 கோடியை தயார் செய்தால் கூட நாளை ‘அது அப்போ விலை இப்போ விலை 6.50 கோடின்னு சொல்லிவிடுவேன். வேறு யாருக்காவது மொத்தமாக விற்பேன் அல்லது பிளாட் போட்டு விற்றுவிடுவேன்” என்றார்.

பகிர்

There are no comments yet