சென்னை: உடல் நிலையை கருத்தில் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஆளுங்கட்சி உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் எம்.எல்.ஏ., 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபைக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற விதியிலிருந்து கருணாநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கருணாநிதி திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமாரும், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தியும் அவரை நேரில் சந்தித்தனர். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட கருணாநிதி வரவில்லை. சட்டசபை வைரவிழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.
இது குறித்து கப்சா நிருபரிடம் செயல்பட முடியாமல் அதிமுக அணிகளின் கிடுக்கிப் பிடியில் சிக்கி இருக்கும் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: அந்தோ! இரும்புப் பெண்மணி ஜெயலலிதா மறைந்து விட்டார். சின்னம்மாவோ இரும்புக் கம்பிகளின் பின் இரண்டு கோடி செலவு செய்து, போயஸ் தோட்ட இல்லத்துக்கு சற்றும் வசதி குறைவின்றி சுடிதார் மிடி என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அரசியல் தனக்கு நிகராக எதிர்வாதம் செய்யவோ, குயுக்திகளை பயன்படுத்தவோ திராணி இல்லாதவர்கள் ஆட்சி என்ற பெயரில் மத்திய அரசுக்கு மண்டியிட்டு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தலைவர் நினைக்கிறார்.
ஜெயலலிதா இல்லாத சட்டசபைக்கு நம் தமிழ் ஈனத்தலைவர் வர மாட்டேன் என்று சைகையில் அடம் பிடிக்கிறார். நிஜ முதல்வர் யாரென்றே தெரியாத தமிழக சட்டசபைக்கு வந்தால் ஒன்றிரண்டு வார்த்தைகள் பிதற்றும் கொஞ்ச நஞ்ச நினைவும் தப்பிவிடும் என்று மருத்துவர்கள் வேறு பயமுறுத்துகின்றனர். திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தால் போராட்டக்காரர்களிடம் இருந்து கருணாநிதி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் சட்டசபைக்கு வர பயந்த நிலையில் உள்ள கருணாநிதி, இயங்காத தமிழக அரசுபோல் இயங்கமுடியாத நிலையில் வயோதிகம் காரணமாக வீட்டில் ஒப்புக்கு சப்பானாக உட்கார்ந்து இருக்கிறார். எதிர்வரும் சுதந்திர தினத்தன்று கூட புளிப்பு மிட்டாய் வாங்க கலைஞர் சட்டசபைக்கு வரமாட்டார் என்பதை நினைத்து மிகவும் வருத்தமாக” இருக்கிறது என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks