சென்னை: சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். கமலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும், தமிழக மக்கள் ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் அமைச்சர்களுக்கே அனுப்புமாறு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் மீண்டும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கமலின் அண்ணன் சாருஹாசன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எங்கள் செலவில் குற்றவாளிகள் குடும்பத்துக்கு பரப்பன அக்ரஹாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள் என்று 60 சதவிகிதம் சசிகலா அவர்கள் கட்சியை எதிர்த்தவர் நினைப்பது எங்கள் அறியாமையோ.?. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சிறையில் இருக்கும் சின்னம்மா சொல்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் சிந்தனையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு.. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்?. குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம். கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜெயகுமார் ஒருவர்தான் இதுவரை லஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது. ஆனால் ஊழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில ரெய்டு, பிரபல காண்ட்ராக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட். நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை?

இது குறித்து சாருஹாசன் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில்: கமல் என்ன சொல்றாருன்னு அவர்க்கும் தெரியாது, யாருக்கும் புரியாது. அது போல நான் சொல்வது உங்களுக்கு இப்போ புரியாது. கமல் முதல்வராக ஆன பின்னாடிதான் எல்லோருக்கும் அவரது பேச்சும், எழுத்தும் புரியும். கமலுக்கு ஆதரவாகவும், அமைச்சர்களை கண்டித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களும் ஒரு நாள் அந்த பிக் பாஸ் நிகழ்த்தி நடக்கும் வீட்டுக்கு உள்ளேயே இருந்து போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இது கமலுக்கு தெரியாது, ரெம்ப ரகசியமாக உள்ளது. கமல் மக்ள் ஸ்ருதியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டு அனைவரையும் என்டர்டைன்மெண்ட் செய்வார் என்றார்.

பகிர்

There are no comments yet