சென்னை: ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என கருதுபவர் நடிகர் கமல் ஹாசன் என்று மிகவும் கீழ்த்தரமாக இறங்கி பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர். அமைச்சர் ஜெயகுமாரோ , கமல் அரசியலுக்கு வரட்டும் அப்போதுதான் தெரியும் என்று வெளிப்படையாக சவால் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு கமல், கவிதை வடிவில் தான் அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தா

இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்

இந்நிலையில் கமல் எச்.ராஜாவிற்கு “எலும்பு வல்லுநர்’ என வைத்த அடைமொழி குறித்து, கமலின் அரசியல் வருனை குறித்தும் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு, முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் எதிர்ப்பு என்று கூறியுள்ளார். பிரச்னை என வரும்போது ஓடிப்போய்விடும் முதுகெலும்பில்லாத கோழை. கமல்ஹாசன் ஒரு இந்துவிரோதி என்பதால் எதிர்க்கிறேன், வக்கிரமாக பேசக் கூடியவர். ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை ஆதரிப்பவர் தலைவருக்கான தகுதியே இல்லாதவர் கமல்ஹாசன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் எச். ராஜா

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்தவே கமல் அரசியல் விமர்சனம் செய்வதாகவும், சமீபத்திய படங்கள் எல்லாம் தியேட்டரை விட்டு ஓடி விட்டதாலும் மற்ற படங்களும் பாதியிலேயே நின்று விட்டதாலும், வருமானத்திற்கு வழியில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், இந்த நிகழ்ச்சியை எப்படியாவது வெற்றி பெற வைக்க இந்தமாதிரி யுக்தியை ஈடுபடுவதாக தெரிகிறது.

There are no comments yet