சென்னை: புரோ கபடி ‘லீக்’ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடந்தது. வீரர்களின் ஜெர்சியும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டி, வரும் 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில், களம் காணும் 12 அணிகளில் ஒன்றான ‘தமிழ் தலைவாஸ்’ அணியைப் பிரபலப்படுத்த, அந்த அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்கள். இந்நிலையில், ‘தமிழ் தலைவாஸ்’ அணிக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்டு அம்பாசிடராக்கி இருக்கிறார்கள். தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்டோர் கமல் ஹாசனுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “கபடி நம் மண்ணின் விளையாட்டு. கட்டிப்பிடித்து விளையாடும் மன்மத விளையாட்டு, நான் எனது வசூல்ராஜா படத்தில் துப்புறவு தொழிலாளரை ‘கட்டிப்பிடித்து’ அரவணைத்து நடிக்கும் காட்சியில் ‘கட்டிப்பிடி – வைத்தியம்’ என்ற பதத்தை பிரபலப்படுத்தினேன். மோடிக்கு முன்பே, விருமாண்டியில் மாட்டை கட்டிப்பிடித்து மரியாதை செய்தவன்.

நான் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் முதல் பரபரப்பு ‘ஜல்லிக்கட்டு’ புகழ் ஜூலி தன்னை பிக்பாஸ் இல்லத்தில் ‘என்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை’ என்று நடிகர் ‘ஸ்ரீ’யிடம் கொஞ்சும் வீடியோ லீக் ஆனதால் வைரல் ஆகி டிஆர்பி எகிறியது. என் மகள் ஸ்ருதியை சினிமாவுக்கு அறிமுகம் செய்யும் போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போட்டோ வெளியிட்டுத்தான் விளம்பரம் தேடினேன். நான் நடிகைகளை கட்டிப்பிடித்து நடிப்பதாக ஒரு கெட்ட பெயர் உண்டு, ஆனால் ஒரு விழாவில் நடிகை ஊர்வசி பேசும்போது, ‘ஒரு எருமை மாட்டை கொண்டுவந்து நிறுத்தினால் கூட கமல் கட்டிப்பிடித்து காதல் சொட்ட சொட்ட நடிப்பார்’ என்று புகழாரம் சூட்டினார். ஸ்ரீதேவி தொடங்கி காமெடி நடிகையான கோவை சரளா வரை ஒருவரையும் நான் விட்டதில்லை

அதே போல் கட்டிப்பிடித்து விளையாடும் கபடியை, எங்கும் பரவிட செய்ய வேண்டும். கபடியை தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக ஒத்துக்கொண்டேன். இந்திய விளையாட்டுகள் அனைத்தும், பதற்றத்தை தூண்டும் என் ட்விட்டுகள் போல, அமைதி காலத்தில் போரை மறக்காமல் இருக்கவே ஆரம்பிக்கப்பட்டது. டென்னிஸ் போல ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் கூட்டாக கட்டிப்பிடித்து விளையாடும் கபடிக்கு தமிழ் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது” என்று கூறி கண் சிமிட்டி அங்கிருந்த “சியர் லீடர்” பெண்ணை சைட் அடித்தபடி முஷ்டியை மடக்கி காட்டினார்.

பகிர்

There are no comments yet