சென்னை: அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வரும், கமல்ஹாசன், ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலால் அடுத்த கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் எழுந்த பிரச்னைக்காக, நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பல விதங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்த கமல், ஊழல் பற்றிய கேள்விக்கு, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாக கூறினார்.
இது, தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா இருந்த வரை, வாய் மூடி மவுனியாக இருந்த அமைச்சர்கள் எல்லாம், வரிசை கட்டி கமலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறினர். இதை அடுத்து, தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் கமலுக்கு ஆதரவாக களம் இறங்க, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கமலை வசைபாட துவங்கின. இதை அடுத்து, கமலை பிரதானப்படுத்தி, அரசியல் வட்டாரங்களில் நாள் தோறும் பரபரப்பு கிளப்பப் பட்டுவருகிறது.
கமல் ஆர்கே நகரில் நிற்கும் செய்தி குறித்து கருத்து தெரிவித்த கூவத்தூர் சின்னம்மா அடிமை கூறும்போது: முடிவெடுத்தால் யாம் முதல்வர்” என்று கவிதை எழுதி, கர்வமாக இருக்கும் கமல், RK நகரில் நின்றால், முடியை இழந்தாலும், முதல்வர் ஆவது குதிரை கொம்பு என்று புரிந்து கொள்வார். உச்ச நடிகர்கள், சின்னம்மா சிறையில் இருப்பதால், இஷ்டம் போல் பேசி வருகிறார்கள்.
சின்னம்மா கூவத்தூர் பைவ் ஸ்டார் ஹோட்டலை சிறையாக்கியவர். பெங்களுர் சிறையை பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாற்றியவர். சின்னம்மா சிறையில் இருந்து வெளியே வந்தால், உச்ச நடிகர்கள், “உச்சா ” போய்விடுவார்கள். தமிழர்களை டாஸ்மாக் க்கு அடிமையாக்கி, தொண்டர்கள் மற்றும் அதிமுக தலைவர்களை அடிமைகளாக வளைந்து குனிந்து தவழ்ந்துவர செய்த சின்னம்மா, ஊழல்களுக்கெல்லாம் பெரிய அம்மா எல்லோரையும் கண்ணசைவில் ஆட்டி படைத்த ஜெயாவையே, இவரது இசைக்கு ஆடவிட்டவர். சசியின் ஆளுமை அதிமுகவினரும் தெரியும் என்பதால் தான், எடப்பாடி பழனி இதுவரை எடுபிடியாகவே திகழ்கிறார். பன்னீர் பதுங்குகிறார். கேப்டனை காமெடியன் ஆக்கிவிட்டார். நமது நல்ல நேரம் சின்னம்மா சிறைக்குள். சின்னம்மா வெளியே வரும் முன், கமல் அல்லது ரஜினி புதுக்கட்சி தொடங்குவது நல்லது. சின்னம்மா வெளியே வந்துவிட்டால், சின்னாபின்னமாக்கிவிடுவார் என்பது நிஜம்.
இன்னொரு நடுநிலையாளர் கூறும்போது: அன்பு மக்களே, கமலஹாசன் வருவதோ, ஒரு விமலஹாசன் வருவதாலோ மக்கள் கோவம் அடையவில்லை. நடிகர் நடிகைகள் வண்டி நல்லா ஓடுற வரைக்கும் சினிமா துறைல நல்லா அனுபவிக்க வேண்டியது. அப்புறம் ரத்தம் சுண்டி போயி, தோலு சுருங்கி, கிழபருவம் எய்தி, சினிமாவில் இனி பிழைப்பதற்கு வாய்ப்பு கம்மி என்ற உடனே, நாடு, நாட்டுமக்கள், அரசியல், ஊழல், ஊழலை ஒழிப்பேன், அது இது ன்னு ஊளையிட்டு கொண்டே அரசியலில் புகலிடம் தேடி மக்களை ஏமாற்றுவதை தான் வன்மையாக கண்டிக்கிறோம். நல்லா இருக்கிற காலத்துல ஒரு பயலும் கண்டுக்க மாட்டானுக, இவனுங்களுக்கு மார்க்கெட் இல்லேனா உடனே வந்து மொளகாய் அரைக்கிறதுக்கு நம்மளை எல்லாம் பாத்தா கேனப்பய மாறி தெரியுதா? அதனாலதான் சொல்றேன் இந்த கமலஹாசன் விமலஹாசனை எல்லாம் வெரட்டி வெரட்டி அடிக்கணும். எவன் ஒருவன் தன் வாழ்நாளை மக்களுக்காகவே வாழ்ந்து கழிக்கிறானோ அவனே ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும். மற்றபடிக்கு இப்படி மார்க்கெட் போன கிராக்கிகள் யார் வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்று உறுதி பூணுங்கள் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks