சென்னை: கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் வழங்கிய குற்றத்துக்காக, மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வளர்மதி, ஏற்கெனவே, கடந்த 7.8.2014 மற்றும் 8.8.2014 ஆகிய நாட்களில், புரட்சிகர மாணவர் இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் போன்ற இடதுசாரி இயக்கங்களின் ஆதரவுடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் விடுதி கட்டணங்களைக் குறைக்கக் கோரி, மாணவர்களை தூண்டி வகுப்புகளை புறக்கணிக்க செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயன்று, அங்கு பாதுகாப்பு அலுவலில் இருந்த பாதுகாவலர்களை மிரட்டியது தொடர்பாக அவர் மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் (கு.எண்கள்.218/2014 மற்றும் 219/2014) பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இதையடுத்து மாணவி வளர்மதி மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பின்னர், அவர் மீது காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, பேராசிரியர் ஜெயராமன், கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால், ஜூன் மாதம் 30-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ‘தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டுவோர்மீது குண்டர் சட்டம் பாயும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மறைந்த ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை எதிரொலியாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “எடப்பாடி பழனிசாமியைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா உடலை புதைக்க மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என்ற விதிக்கு மாறாக, ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்டப் போவதாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவது சட்ட விரோதம் எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதியின்றி ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது. ‘மதுக்கடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தை அழிக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் மக்களைப் போராடத் தூண்டுவதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.

அதனால், போராட்டத்தைத் தூண்டி விடும் எடப்பாடி பழனிசாமியைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுங்கள்’ என்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் இளைஞர்கள் இந்த மனுவைக் கொடுத்து அதிரவைத்தார்கள். இதைக் கேட்டு எடப்பாடி உள்ளிட்ட அணியினர் அதிர்ச்சி அடைந்ததாகவும், சமீபத்தில் ஓ.பி.எஸ் விற்ற கிணற்றில் விழுந்துவிடப் போன எடப்பாடியை ஆறுதல் கூறி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தேற்றி, திரும்ப அழைத்துவந்து, மீதமுள்ள சமூக ஆர்வலர்களை கைது செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும், எடப்பாடி அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், கப்சா நிருபர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet