சென்னை: தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளில் கலப்படம் இருப்பதாகவும், ரசாயன கலப்பு இருப்பதாகவும் பால் வளத்துறை அமைச்சர் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்தவண்ணம் இருக்கிறார். தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு போட்டு, ஆதாரமில்லால் கருத்து தெரிவிக்க் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. பால் கலப்படம் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: பால் கலப்படம் குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் உள்ளது. மிரட்டும் நோக்கத்துடன் 3 பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. தங்கள் பாலில் கலப்படம் இல்லை என்பதை அந்த நிறுவனங்களால் நிருபிக்க முடியாது. தங்களுடைய குறையை மறைக்கவே வழக்கு தொடர்ந்துள்ளன. சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களே எனது குற்றச்சாட்டுக்கு பயப்படுகின்றன. அமைச்சர் என்ற முறையில் சோதனை நடத்த உரிமை எனக்கு உள்ளது. பொது ஊழியர் ஒருவர் பணி செய்வதை தடுக்க சிவில் வழக்கு தொடர முடியாது. கலப்பட பால் நிறுனங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்னுடைய பணி தொடரும். இவ்வாறு அமைச்சர் மனுவில் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகளை ஆய்வு செய்ய இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தங்களது டீலர்களிடம் சட்ட விரோதமாக பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருவதாகக் கூறி ஹட்சன், விஜய் பால் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், ‘பால் பரிசோதனையை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மட்டுமே நடத்த முடியும். மாநில அரசு பரிசோதனை செய்ய முடியாது. எனவே, தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல், விற்பனை, பால் பொருட்களின் உற்பத்தி போன்ற தங்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல பால் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பவும் தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள், நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது: தங்களுக்குப் போட்டியாக உள்ள ஆவின் நிறுவனத்தின் ஆணையர், தங்களது பால் பொருட்களை ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. ஆனால் ஆவின் அதிகாரிகள் சட்ட விரோதமாக பால் மாதிரிகளை எடுத்து வருகின்றனர். எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை எந்தப் புகாரும் கூறவில்லை. ஆனால், ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்தவே தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்பட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. மேலும், பால்வளத்துறை அமைச்சரே குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாநில அரசின் ஆய்வுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனவே, பால் மாதிரிகளை ஆய்வு செய்ய நடுநிலையான குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி, ‘‘நாடு முழுவதும் 68.4 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே கலப்படத் தைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விற்பனைக்கு வரும் பாலின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.துரைசாமி, மனுதாரர்களான 2 நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத் துறை முதன்மைச் செயலாளர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆணையர் உள்ளிட்டவர்கள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மாதிரிகளை எடுத்து சோதனை நடத்த தடை என்ற செய்தியை கேட்டு கடுப்பான பால் ‘வளவளா’த்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோர்ட்டு வாசலில் கப்சா நிருபரிடம் சிக்கிக் கொண்டார்:

நிருபர்: ஆவின் பால் லாரிகளை நிறுத்தி இடையில் நீர் கலப்படம் செய்ததாக சேதிகள் வந்ததே அப்போது எந்த பாதிப்பும் தங்களுக்கு ஏற்படவில்லையே..
அமைச்சர்: “மக்கள் தமிழக அரசின் மீதே நம்பிக்கை இழந்து விட்டனர். அதிமுகவில் கலப்படம் நிறைந்து இருக்கிறது. ஆவினை பற்றி பேசி பயனில்லை.

நிருபர்: “ஆதாரங்களை வைத்துக்கொண்டு இத்தனை நாட்களாக வேறு என்ன செய்துகொண்டிருந்தீர்கள், ஆதாரம் இருந்தால் அதை வெளியிட எந்த கட்டுப்படும் இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டதே.”
அமைச்சர்: பாலை வீட்டிற்கு கொண்டுபோய் சுய பரிசோதனை செய்து பார்த்தேன், காய்ச்சினால் ஆடை கட்டுகிறது, கடைந்தால் வெண்ணையும் மோரும் தனியாக வருகிரது, வெண்ணையை உருக்கினால் நெய் வருகிறது. பால் வாங்கினால் பால் மட்டும் தானே வரவேண்டும்..

நிருபர்: அது சரி.. என்னதான் சொல்ல வர்றீங்க..?
அமைச்சர்: ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலையில் உள்ளது. எரிகிற கொள்ளியில் புடுங்கின வரை லாபம். எனது துறையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ‘கட்டிங்’ கிடைக்கும் வரை ‘பால்’ கலப்படம் பற்றி பிதற்றிக் கொண்டே தான் இருப்பேன். உயர்நீதிமன்றம் என்ன, உச்ச நீதி மன்றமே கூறினாலும், வாய்ப்பூட்டு போட்டாலும் கள்ள சாவி போட்டாவது திறந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பேன்..” என்றார்.

பகிர்

There are no comments yet