சென்னை: பிஹாரைவிட தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் கே.பழனிசாமியோ, கமல் அரசியலுக்கு வரும்போது பதிலடி கொடுப்போம் என்றார்.
கமலும் ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பிரவேசம் தொடர்பாக சூசக தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும், சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழல்களையும் களைய முயல்வதென் கடமை. உமதும்’ என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மற்றொரு பதிவில் ‘நான் ஊழலுக்கு எதிரானவன். எல் லோரும் பயப்படுவதைப்போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. கிளர்ச்சி யாளர்கள் எப்போதும் சாவுக்கும் தோல்விக்கும் அஞ்சமாட்டார்கள். நீங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறும்போது: திமுக கடந்த ஆட்சி காலத்தில் 170000000000 கோடிக்கு 2-Gயில் கொள்ளை அடித்த போது நான் கவுதமி கூட இருந்தேன், எல்லோரும் 2-G என்று சொன்னபோது to Gautami என்று நினைத்து விட்டேன். யார் ஊழல் செய்தலும் விடமாட்டேன் என்றார். இதனால் ஸ்டாலின் ஷாக்கில் இருப்பதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks