சென்னை: ”பிரதமரிடம் தமிழக பிரச்னைகள் குறித்து தான் பேசினோம்; அரசியல் பேசவில்லை,” என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நினைவு மண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம், நேற்று மாலை, சென்னையில் இருந்து, மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை, விமான நிலையத்தில், அவர் கூறியதாவது: ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, டில்லி சென்று வந்தோம். அங்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, தமிழக மாணவர்களை பாதிக்கும், ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விதி விலக்க அளிக்க வேண்டும் என்பது குறித்தும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் எடுத்துரைத்தோம். அவர் கவனிப்பதாக தெரிவித்தார். பிரதமரிடம் தமிழக பிரச்னைகள் குறித்துதான் பேசினோம்; அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர்., உருவ நாணயம் : பன்னீர்செல்வம், நன்றி : எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் மத்திய அரசின் முடிவிற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த, நாணயம் வெளியிட வேண்டும் என, முதல்வராக இருந்தபோது, கடந்த, ஜன., 5ல், மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில், கடிதம் அனுப்பினேன். என் வேண்டுகோளை ஏற்று, எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயம் வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதல் கடிதத்தை, மத்திய நிதி அமைச்சகம், ஜூலை, 17ல் எனக்கு அனுப்பியது. எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்த, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது தலைமையிலான, மத்திய அரசுக்கும், தமிழக மக்களின் சார்பாகவும், அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பாகவும் நன்றி.

அடுத்தடுத்த தோல்விகளால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எத்தனை காலம் இப்படி அனாதையாக இருப்பது என்றும் புரியவில்லை. எனவே எனக்கும், என் கூட இருக்கும் முட்டாள்களுக்கு இன்று கிளாஸ் எடுத்த மோடி கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருந்து விட்டு பாஜகவில் இணையுமாறு சொன்னார். எனக்கு கவர்னர் பதவியும், எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும் நிச்சயம் என்றார். எம்எல்ஏக்களை சசிகலாவிடம் திரும்பி போக சொல்லி விட்டார் என்றார்.

பகிர்

There are no comments yet