சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள வீட்டில் வசிக்கிறார். குடும்பத்துடன் நேற்று அவர் மதுரை சென்றிருந்தார். வீட்டில் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வீட்டின் அருகே பந்து போன்ற மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் காவல் காத்த போலீசார் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் பறந்தது.

தென்சென்னை இணை கமிஷனர் அன்பு, தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் போலீஸ் படையோடு சென்றனர். வெடிகுண்டு நிபுணர் அன்பழகனும் விரைந்து சென்றார். ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் அருகே கிடந்த மர்ம பொருளை முதலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

சோதனையில் அது வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. அதன்பிறகு அதை எடுத்துச் சென்று தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் இருந்த பொருள் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் பந்து போன்ற பொருள் இருந்தது. அதில் துவாரம் போட்டு மண்ணையும், பட்டாசு வெடிமருந்தையும் கலந்து நிரப்பி இருந்தனர். பந்து துவாரத்தில் திரி இணைத்து மஞ்சள் நிற டேப்பால் சுற்றிப் பார்ப்பதற்கு வெடிகுண்டு போல் தயார் செய்திருந்தனர்.

மிரட்டலுக்காக வெடிகுண்டு போல் செய்து ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே யாரோ? மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. அது போலி வெடிகுண்டு என்றும் கண்டறியப்பட்டது. இந்த போலி வெடிகுண்டை ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து ஓபிஎஸ் வீட்டில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் தினகரன் ஆதரவாளர் கூறியதாவது: நான் அண்ணன் தினகரனுக்கு விசுவாசி, ஓபிஎஸ்சுக்கு உளவாளி. பந்துக்குள்ள பட்டாசை வைத்து அதை வெடிகுண்டாக மாற்றும் திறமை ஓபிஎஸ்சுக்கு மட்டுமே உள்ளது. பாஜக பாணியில் இதை செய்துள்ளார். அடிக்கடி மோடியை சந்தித்ததால் பாஜக புத்தி வந்துவிட்டது என்றார்.

பகிர்

There are no comments yet