சென்னை:கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் தங்கி ‘ஷமிதாப்’ போன்ற ஓரிரு பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தற்போது விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் தல அஜித்துடன் நடித்து வருகிறார். அவர் புத்த மதத்துக்கு மாறியதாக சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. ஆரம்பத்தில் அவர் அதனை மறுத்தார்.
தந்தையைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், புத்த வழிபாட்டில் கவனம் செலுத்துவது பிடிக்கும் என்று கமல்ஹாசனின் மகள் நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார். விவேகம் படத்தில் நடித்தது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘‘உங்கள் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி?’’ என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அக்ஷரா ஹாசன், ‘‘கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்’’ என்று கமல் மாதிரியே குழப்பினார்.
புத்த மதத்துக்கு மாறிய மகளுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார், கமல் தனது பதிவில் “அக்ஷரா, புத்த மதத்துக்கு மாறிவிட்டாயாமே, அப்படி மாறி இருந்தால் எனது வாழ்த்துக்கள், மதங்களைப் போல் அல்லாமல் நிபந்தனையின்றி அன்பு செலுத்த வேண்டும், களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விஸ்வரூபம் 2 வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் பின் லேடன் கெட்டப்பில் தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சியாளனாக நடித்து இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ‘பிரியாணி’யையும் தடை செய்யவேண்டும் என்று கூறி அந்த அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். தற்போது “ஒரு லட்சத்தி நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை கொலை செய்யச்சொன்ன புத்தமதத்திற்கு மாறிய என் மகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அதுவும் உண்மையில் (அல்லது செயலில்) சாத்வீகத்தில் நம்பிக்கை இல்லாத மதம் தான்! ஸ்ரீலங்காவும் பர்மாவும் இதற்கு கண் முன் உள்ள சாட்சிகள்.. என்ற சர்ச்சை கருத்தயும் தனது ‘கப்சா’ ட்விட்டரில் தெறிக்கவிட்டுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks