காந்திநகர் : அமித்ஷா தேர்தல் ஆணையத்தில் அளித்த சொத்து விவரப்படி அவருடைய சொத்துக்கள் 300 சதவிகிதம் அதிகம் ஆனது தெரியவந்துள்ளது. எதிர்வரும் ஆக 8ஆம் தேதி குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அதன் தலைவர்களுள் ஒருவரான அமித்ஷா போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் படி கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.9 கோடி, தற்போது ரூ.19 கோடி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சொத்துக்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
பத்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று எம்.பி. காலி இடங்களும் அடங்கும். இந்த மூன்று தொகுதிகளில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ஸ்மிரிதி இராணி மற்றும் ராஜ்புட் ஆகியோர் போட்டியிருக்கின்றனர். இதற்காக மூவரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துக்களின் மதிப்பு 5 ஆண்டுகளில் மடமடவென உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அமித் ஷாவின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.90 கோடி. 2017ஆம் ஆண்டில் இது 19 கோடியாக அதிகரித்துவிட்டது. மொத்தமாக அமித் ஷா மற்றும் அவரது மனைவி வசம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இப்போது 34.31 கோடி. இதுவே, 2012ஆம் ஆண்டில் வெறும் 8.54 கோடியாக இருந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே அவரது சொத்து மதிப்பு 300 சதவீதம் அதிகமாகயுள்ளது.

இவரைப் போலவே ஸ்மிரிதி இராணியின் சொத்து மதிப்பும் கடந்த மூன்று ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டில் 4.91 கோடியாக இருந்த ஸ்மிரிதி இராணியின் சொத்து மதிப்பு இப்போது, 8.88 கோடியாக எகிறியுள்ளது. இதுமட்டுமல்ல, 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தபோது, டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம். பட்டம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்மிரிதி இராணி. இப்போது, தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மூன்று ஆண்டுகள் பி.காம். பட்டத்தை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது, அகமதாபாத் நானாபுரா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அமித் ஷா மாநிலங்களைவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. பதவி பெற்றுவிட்டால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது குறித்து அமித்ஷா டில்லி சிறப்பு கப்சா நிருபரிடம் பேசினார்: தமிழகத்தில் திராவிட கட்சிகள் சுருட்டிய அளவுக்கு எங்கள் காவி அரசால் சொத்து குவிக்க முடியவில்லை, பாதி பாபா ராம் தேவிற்கும் மீதி அம்பானி அதானிக்கும் போய்விட்டது. ஜெயா கருணா சொத்துக்களை விவரிக்க ஒரு நாளிதழின் முழுப்பக்கம் போதாது. எனது சொத்து விவரம் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்துள்ளது, அது அவமானமாக இருந்ததால் அதை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெப்சைட்டில் இருந்து நீக்க சொல்லிவிட்டேன். கொடநாடு கொள்ளை, டுபாக்கூர் கம்பெனிகள், டாஸ்மாக், மற்றும் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, 2ஜி ஊழல் இவற்றுக்கெல்லாம் நிகராக ஒரு மாபெரும் ஊழலை நிகழ்த்திவிட்டு இந்தியாவின் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரம் செய்து சாதனை படைப்பேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet