சென்னை: ஜிஎஸ்டி விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சென்னை வந்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற அருண் ஜெட்லி, ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

அதற்குப் பிறகு அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ஜெயக்குமார் ஆகிய மூவரும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகை புரிந்து ஜிஎஸ்டி கருத்தரங்கில் பங்கேற்றனர். இதனிடையே, ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பல்கலை முன்பு 12 மாணவர்கள் அருண் ஜேட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மாணவர் குழுவை போலீஸ் விசாரித்து வருகிறது. அவர்கள் அருண் ஜெட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, விசாரணை மேற்கொண்டதாஅக காவல் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக நூலகத்திற்கு படிக்க வந்த மாணவர்களையை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்து இருப்பதாக மாணவர்கள் சிலர் பேஸ்புக்கில் பதிவிட்டனர். அதே போல் மாணவியின் பதிவொன்றில், ஜெட்லி வருகையின் கரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளேயே சிறை வைக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணம் என்ன என்று கப்சா நிருபர் புலனாய்வில் தெரியவந்துள்ளது. “கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜெயா சமாதிக்கு சென்ற ஜெட்லி ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசியதாகவும், முன்னதாக அதிமுக ஆட்சியில் மூன்று கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட 570 கோடியை மீட்டு பத்திரமாக ஒப்படைத்தேனே அது எங்கே, எதிர்வரும் குஜராத் தேர்தல் செலவுக்கு தேவைப்படுகிறது” என்று விசாரத்ததாக தெரிகிறது. அதற்கு ஜெயாவின் ஆவி கோபாவேசமாக பதிலளித்துள்ளது. அந்த கடுப்பை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜெட்லி காட்டியதால், பல்கலைக் கழக லைப்ரரியில் படிக்க வந்த மாணவர்களையும், பீச்சில் சுண்டல் விற்க வந்த சிறுவர்களையும் கைது செய்து காவல் துறை தங்கள் கோபத்துக்கு வடிகால் தேடிக் கொண்டதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet