சென்னை: ‘அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்’ என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு, ‘செக்’ வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் தயாராகி வருகின்றனர்.’பன்னீர் மற்றும் பழனிசாமி என, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், 60 நாட்களுக்குள் இணைய வில்லை என்றால், ஆக., 5ல், என் தலைமை யில், முக்கிய முடிவு எடுக்கப்படும்’ என, திஹார் சிறையில்இருந்து ஜாமினில் வெளியே வந்ததும், சசிகலா அக்கா மகன், தினகரன் அறிவித்தார்.

கட்சியின் துணை பொதுச்செயலராக, சசிகலா வால் அறிவிக்கப்பட்ட அவர், தீவிர அரசியலில் ஈடுபடாமலும், சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு செல்லாமலும், ஊடகங் களில் மட்டுமே பேட்டியளித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன், தன் உறவினரும், சசிகலா வின் சகோதரருமான திவாகரனை, தஞ்சாவூ ரில் சந்தித்து, இணைந்து செயல்பட முடிவு செய்தார்.

சசிகலா குடும்பத்தில், இரு துருவங்களாக இருந்த இவர்கள், ஒற்றுமை அடைந்துள்ள தால், எதிரணியினரான, பழனிசாமி தரப்பினர் உஷார் அடைந்துள்ளனர்.பன்னீர் மற்றும் பழனிசாமி என, இரு அணிகளின் இணைப்பு, இன்னமும் நடக்காததால், ஆக., 5 முதல், தீவிர அரசியலில் ஈடுபட, தினகரன் முடிவு செய்துள் ளார்.ஆக., 7ல், மதுரையில் பிரமாண்டபொதுக் கூட்டம் நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

அதற்கு முன், ஆக., 4ல், சென்னை, ராயப் பேட்டை யில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்துள்ளார். ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர் கள்,எம்.எல்.ஏ.,க்கள்,நிர்வாகிகளை சென்னை க்கு வரவழைத்து, அவர்களுடன் கட்சி தலை மையகத்திற்குள் நுழைந்து, தன் கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து, தஞ்சாவூரில், ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த தகவல், முதல்வர் பழனிசாமிக்கு, உளவு துறை போலீசார் மூலம் தெரிய வந்துள்ளது. உடனே அவர், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.அப்போது, முதல் வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஆக., 4ல், கட்சி தலைமைய கத்திற்கு சென்று,அதை தங்கள் கட்டுப் பாட்டில் எடுப்பது’ என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தினகரனும், அவரது ஆதரவா ளர்களும், கட்சி அலுவலகத்திற்குள் நுழையமுயன்றால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும்,முதல்வருக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.

அதை ஏற்றுள்ள முதல்வர், காய்களை நகர்த்தி வருகிறார். தினகரனை கைது செய்ய உள்ள தகவல், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., மூலம், தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு தினகரன், ‘கைது நடவடிக்கையை கண்டு நான் பயப்பட மாட்டேன்; அ.தி.மு.க.,வை, பா.ஜ.,விடம் அடகு வைப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற போராடுவேன்’ என, கூறியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவின் அண்ணன் மனைவி, மறைந்த, சந்தானலட்சுமியின், மூன்றாம் நாள் காரியங் கள், நேற்று, தஞ்சாவூரில் நடந்தன. அதில், பங்கேற்க வந்த, சசியின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:பன்னீர்செல்வம் எங்கள் பங்காளி தான். அந்த அணியில் இருந்து ஒவ்வொருவ ராக, எங்கள் அணியில் இணைந்து வருகின்ற னர். இதை புரிந்து, பன்னீர் எங்களுடன் இணை வார். அனைவரும் இணைந்து, பணியாற்று வோம்.சிறையில் இருந்து, சசிகலா ஜாமினில் வர, விண்ணப்பித்துள்ளோம். அவர் வந்ததும், கலந்து பேசி, நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் கூறுகையில், ”இரண்டு அணிகளும், இணைவதற்கு எங்கள் குடும்பம் இடையூறாக இருப்பதாக கூறினர். இதனால், நான் விலகி இருந்தேன். 60 நாட்களாக விலகி இருந்த எனக்கு, நானே விதித்த கெடு, 4ம் தேதி முடி கிறது.அதன் பின்,என் பணியை துவங்குவேன். ”அணிகளை இணைத்து, கட்சியை பலப்படுத் தும் பணிகளில் ஈடுபடுவேன். அமைச்சர்களுக் கும், எங்களுக்கும், எந்த கருத்து வேறுபாடும் இல்லை,” என்றார்.
இது குறித்து தினகரன் ஆதரவாளர் கூறும்போது : பழனிசாமியை முதல்வராக்கியவர்களையே கைது செய்யக்கூடிய அளவுக்கு முடிவெடுத்து விட்டார் என்றால் அதில் இருந்தே தெளிவாக தெரிகிறது இவர் பன்னீரை விட மோசமான நம்பிக்கை துரோகி என்று . தங்கள் கட்சியின் பொது செயலாளர் சசிகலா என்றும், கட்சியின் துணைப்பொது செயலாளர் தினகரன் என்றும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த லட்சக்கணக்கான பிராமண பாத்திரங்களிலும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்கள், தங்கள் கட்சியின் துணைப்பொது செயலாளரையே இவர்கள் கைது செய்வார்களா ? . பிஜேபியின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்படியொரு விபரீதமான முடிவு எடுத்தால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இவர்கள் தங்கள் பதவியை காப்ப்பாற்றிக் கொள்வதற்காக பிஜேபியின் அடிவருடிகளாக மாறி விட்டார்கள் என்று . கட்சி தொண்டர்கள் சென்ற மூன்று மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து நன்றாக புரிந்துகொண்டுள்ளான் கட்சியை யாரால் காப்பாற்ற முடியும் என்று . பண்ணீராலோ, பழனிசாமியாலோ கட்சியை ஒருபோதும் வல்லூறுகளிடம் இருந்து காப்பாற்றவே முடியாது , கட்சியை வீணாக சிதைத்து விடுவார்கள் என்று உணரத்தொடங்கி வெகு நாட்களாகி விட்டது . தினகரானால் தான் எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, கட்சியை மற்றவர்கள் சின்னாபின்னப்படுத்துவதில் இருந்தும் காப்பாற்ற முடியும் , கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க முடியும் என்பதை பெரும்பாலான அண்ணா திமுக தொண்டர்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள் . எனவே அமைச்சர்களாக இருப்பவர்கள் , ஒழுங்கு மரியாதையாக மக்களுக்கு தங்கள் துறைகளின் மூலம் எவ்வளவு நல்லது செய்யமுடியுமோ அந்தளவுக்கு நல்ல திட்டங்களை , ஊழலில்லாத வகையில் நிறைவேற்றி வந்தாலே போதுமானது, கட்சி நடவடிக்கைகளில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் , கட்சி எப்படி செயல்பட வேண்டும், எந்த சமயத்தில் யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் கட்சி துணைப்பொது செயலாளர் கவனித்துக்கொள்வார் என்றார்.

There are no comments yet