தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளளர் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க
ஓ. பன்னீர்செல்வம் ஒரு முனிவர் போல பேசுகிறார். அவர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து உறுதிமொழி எடுத்திருக்கிறார். அது என்ன புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா?
ஸ்டாலினாலோ, ஓ. பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதை செய்திருப்பார்.
ரஜினிகாந்த் எப்போதும் இதைப் பற்றி பேச மட்டும் தான் செய்வார் . அதை அவர் சரியாக கடைபிடிப்பார். அவரால் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. கடந்த காலங்களில் எதை செய்தாரோ, அதைத் தான் இப்போதும் செய்வார். நான் தைரியமாக அரசியலில் குதித்த போது அவர் பாராட்டினார். கமலஹாசன் அரசியலுக்கு வரமாட்டார். அவர் ஊழல் பற்றி கேள்வி கேட்டதில் எந்த தவறும் இல்லை. தமிழக அரசில் ஊழல் மோசமான நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
There are no comments yet
Or use one of these social networks