சென்னை: சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாததால் ரஜினியின் ‘காலா’ உட்பட 37 படங்களின் படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், பட அதிபர்கள், பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். சுமுகமான முடிவு எட்டப்படாததால் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 2ஆவது நாளாகத் தொடர்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்து பெரும்பான்மையான படத்தில் படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்ததால் சினிமா உலகம் ஸ்தம்பித்தது.

செவ்வாய் கிழமை முதலே தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புத் தளத்திற்கு செல்லவில்லை. இதனால் சென்னை பூந்தமல்லியில் நடந்து வந்த ரஜினியின் காலா விஜயின் மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. ஆர்.கே. செல்வமணி தலைமையிலான நிர்வாகிகள் இன்று ரஜினியை சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, ரஜினி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’எனக்கு பிடிக்காத சில சொற்களில், ‘வேலை நிறுத்தம்’ என்பதும் ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி இரு தரப்பும் பேசி, சுமுகமான முடிவு எடுங்கள். மூத்த கலைஞன் என்கிற முறையில் இது எனது அன்பான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் போயஸ் தோட்டத்தில் இரண்டு நாள் லீவு கிடைத்ததால் முதியவர்கள் பயன்படுத்தும் ஈசி சேரில் ‘ஹாயாக’ உட்கார்ந்தபடி கப்சா நிருபரிடம் கூறியதாவது. “ஷங்கரின் 2.0 கிராபிக்சின் மூலம் படத்தை முடித்து விடுவார்கள் எனது மாடல் போதும். ஆனால் காலாவில் நான்தான் நடித்தாக வேண்டும். மோடி வேறு புது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டார். காலா படத்தை விரைவாக முடித்து ‘கல்லா’ கட்டி மிச்ச மீதி 2000 நோட்டுக்களை கபளீகரம் பண்ணலாம் என்றிருந்தேன். அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. இரண்டாவது மகளுக்கு சமீபத்தில் தான் உறவை அத்து விட்டேன் (விவாகரத்தை சொல்கிறார்) இரண்டாவது மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுக்க பணம் வேண்டும். விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் போது ‘அகராதியில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு’ என்று ஒரு வசனத்தை பிரபலப்படுத்தினார். அது இயக்குனர் எழுதிக் கொடுத்தது. பின்னர் மேடைகளில் ‘ஆத்திரங்கள் வருது மக்களே’ ‘இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா’ என குடித்து உளறி காமெடி பீசாகி விட்டார். நானும் கமலும் அரசியலுக்கு வராமல் ‘பாவலா’ காட்டுகிறோம் என்று குட்டை உடைத்து விட்டார். காலா வேலைகள் நின்று விட்டதால் நானும் நிதானம் இழந்து விஜயகாந்த் போல உளறி விட்டேன். மீம் கிரியேட்டர்கள் என்னையும் டூப்பர் காமெடி பீசாக மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.” என்று பயப்படுவது போல் நடித்துக் காட்டினார்

பகிர்

There are no comments yet