சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தனுஷ் குடும்பத்தினர் ஓய்வெடுப்பதற்காக, சினிமா படப்பிடிப்புகளின் போது பயன்படுத்தப்படும் சொகுசு கேரவன் வாகனம் அவர்கள் வருவதற்கு முன்னர் ஆண்டிப்பட்டிக்கு வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நல உதவிகளை அவர் வழங்கினார். முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வத்தின் கோயிலான கஸ்தூரி அங்கம்மாள் கோவிலில் வழிபாடு செய தனது தாய், தந்தை மற்றும் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் வந்தார் தனுஷ்.
வந்தவர்கள் கேரவனில் டேரா போட்டதாக தெரிகிறது. இந்த வேனில் உள்ள குளிர்சாதன இயந்திரத்திற்காக அருகில் உள்ள பொது மின்கம்பத்தில் இருந்து முறைகேடாக அனுமதி இன்றி மின்சாரம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை அருகில் இருந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அலட்சியம் செய்துவிட்டு தொடர்ந்து மின்சாரம் எடுத்துள்ளனர். மின்வாரியத்திற்கு தகவல் சென்றதால், அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர். பின்னர் முறைகேடாக வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாக கூறி ரூ.15.731 அபராதம் விதித்தனர். இந்த தொகையை கட்டிய பின்னரே வாகனம் விடுவிக்கப்பட்டது.
இது குறித்து வேலை இல்லாப் பட்டதாரி பட டப்பிங்கில் வேலை செய்து கொண்டே தனுஷ் நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது. “எனது மாமா விரைவில் தனிக்கட்சி அமைத்து தமிழ்நாட்டுக்கு சி.எம். ஆகப்போகிறார். அப்புறம் என் ரேஞ்சே வேற.. நான் வைத்தது தான் சட்டம். அதனால் பொது சொத்தை கொள்ளை அடிக்க ஒத்திகை பார்த்தேன். பிளாப் ஆன ‘மாரி’ பத்தில் வந்த குத்துப்பாடலில் சொன்னது போல் ‘தர லோக்கலுக்கு’ இறங்கி முதல் கட்டமாக தெருவில் மின்சாரத்தை திருடினேன். பின்னர் அடுத்த கட்டமாக அரசு அலுவலகங்களுக்குள் நுழைய திட்டம் வைத்துள்ளேன். நான் உதவிகள் வழங்கியது வறட்சியால் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அல்ல என் படங்களை பார்த்து துக்கம் தாங்காமல் மாண்டவர்கள் குடும்பத்துக்குத் தான். மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுதலை கிடைத்ததை கொண்டாட குலதெய்வம் கோவிலுக்கு வந்தேன், வந்த இடத்தில் சில சிம்பு ரசிகர்கள் போட்டுக் கொடுத்ததால் மின்வாரியத்திற்கு இப்படி தண்டம் அழ வேண்டி வந்துவிட்டது. என் மாமா சி.எம். ஆனதும் அந்த மின்வாரிய அதிகாரிகளை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்’ என்றார்.
There are no comments yet
Or use one of these social networks