Reproduced from தோழர். ஆலஞ்சி
கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தர்மயுத்தம் நடைபெறும் பன்னீர் செல்வம்..
இந்த ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது ஜெயகுமார்..
..
தர்மயுத்தம் அப்படின்னா என்னென்னு சத்தியமா தெரியல..
மகாபெரியவர் தெய்வத்தின் குரலில் இப்படிதான் சொல்கிறார்
// #கொள்ளையடிக்கிறவன், நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறவன், பிற ஸ்திரீயை அபகரிக்கிறவன் ..நெருப்புவைக்கிறவன் அதாவது குடிசையை கொளுத்துகிறவன் நிராயுதபாணியை ஆயுதம் கொண்டு தாக்குகிறவன்.. ஆகியவர்களை ஆததாயிக்களின் லிஸ்டில் வருகிறார்கள்.. அதாவது ஐந்து பெருங்குற்றம் செய்கிறவன்#ஆததாயி..
..
கொள்ளை அடித்தவனெல்லாம் அல்லது பதவி தந்தவரை கொள்ளையடித்தவனை புகழ்ந்து நின்றவன்.. அடித்த கொள்ளையில் பங்கு தந்து எஜமானரை குளிர்வித்தவன்.. பதவியை பறித்தவுடன் தர்மயுத்தம் என்பது நியாமில்லை..
அது சரி இதுவரை தர்மயுத்தம் முடிந்தபாடில்லையா.. ஏன் இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மக்களிடம் நீதி கேட்கலாமே.. அதற்கு முழு முயற்சி எடுக்கலாமே.. எடப்பாடி தினகரனை எதிர்ப்பதாக சொல்லும் இவர் எல்லாருக்கும் முந்தி சென்று மோடியுன் காலில் விழுவதேன்.. பதவிக்காக காட்டி கொடுக்கிறவன் பதவி தந்தவரையே ஏமாற்றுகிறனெல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசகூடாது..
..
ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்.. என்கிறார் ஜெயகுமார்.. எடப்பாடிக்கு ஆட்சியை பிச்சை போட்டதே சசிகலா தான் என்ற வெற்றிவேலின் பேச்சுக்கு பதில் இல்லை ஆம் உண்மையில் மத்திய அரசு சசிகலாவிற்கு தந்த நெருக்கடியை போல இந்திய அரசியலில் எவருக்குமே தந்ததில்லை ஜெயலலிதா கிரிமினல் என தெரிந்தும் முகர்ந்து பார்த்து மெச்சியவர்கள் சசிகலாவை சாக்கடை என்கிறார்கள்.. இதோ இப்போது நிதிஷ்க்கு வழங்கிய வாய்ப்பை கூட சசிக்கு வழங்கவில்லை அவசரகதியில் மாற்று ஏற்பாடு செய்வதற்கு அவகாசமல்லாமல் எடப்பாடியை கைக்காட்டினாரே தவிர .. கொஞ்சம் வாய்ப்போ அவகாசமோ இருந்திருந்தால் சசி குடும்பத்திலிருந்தே யாராவது வந்திருப்பார்கள் அப்போது இந்த ஜெயகுமார் போன்ற அடிமைகள் காலை நக்கி பிழைப்பு நடத்திருப்பார்கள்..
..
சசிகலாவை சரி என்பதல்ல நோக்கம்..எடப்பாடி பன்னீரை விட கேவலமானவர் அல்ல என்பதை சொல்லவேண்டியிருக்கிறது.. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விரட்டபடவேண்டியவர்கள். தமிழகத்திற்கு நல்லதொரு விடியலுக்காக இவர்களை போன்ற பதவிக்காக எதையும் செய்ய துணியும் மானங்கெட்ட கயவர்கள் அரசியலில் இருந்தே துரத்தப்பட வேண்டும்.
(Edited)
There are no comments yet
Or use one of these social networks