சென்னை: 94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் சமையல்காரரைத் தவிர அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது பெற்றோர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளியின் சமையலறையில் பற்றிய தீயே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. பள்ளி தாளாளர் பழனிசாமி உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உட்பட மொத்தம் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பழனிசாமி மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோருக்கு தஞ்சை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமையல்காரர் வசந்தியின் தண்டனையை உறுதி செய்தும், பழனிசாமி இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என கூறி, மற்ற 9 பேரையும் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பினாமி முதல்வர் பழனிசாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையுனும் கப்சா செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். “நீட் தேர்வு பிரச்சனைக்கு பிறகு, இரண்டு மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்று நாங்கள் கூறியதன் முன்னோட்டம் தான் இந்த விடுதலை படலம். பல நூறு கோடிகள் கொள்ளையடித்த அம்மவையே நீதிமன்றம் விடுவித்தது. தீவிபத்தில் செத்துக்குவிந்த குழந்தைகள் எம்மாத்திரம்.. அரசுத்துறை எப்படி கறைபடிந்த கரங்களுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருவது பெருமிதம் அளிக்கிறது. பெரிய வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் இறந்து போன பால்வாடி குழந்தைகள் ஒன்றும் முக்கியமில்லை. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி. தயாரிக்கும் பணிகள் மும்முரமாக பர்மா பஜாரில் நடந்து வருகிறது. ஆகமொத்தம் நீட் வேண்டும் என்பதில் மோடி போலவே நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.
பழையபடியே மறுபடியும் மாணவ
ர்களை மனப்பாடம் செய்ய வைக்கும் ஒரு ஏற்பாடு இது.. கேள்விகளை புரிதலின் அடிப்படையில் அணுக வைப்பதே கூடாது..! மொத்த கேள்விகளில் ஒரு கேள்வியாக கும்பகோணம் நிகழ்வை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்ய உள்ளோம். பள்ளிச்சீருடைக்கு பதிலாக பணம் கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரமும், குட்கா வியாபாரிகளும் பயனடைவார்கள்,” என்றனர்
There are no comments yet
Or use one of these social networks