சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் களத்தில் உலகமே பார்த்த போதும் கூவத்தூர் கும்மாளம் மூலம் சசிகலா தரப்பால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கும் – தினகரன் தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனை ஏற்க முடியாது என நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது அறிவிப்புகள் யாரையும் கட்டுப்படுத்தாது. அவரால் தரப்படும் பதவிகளும் செல்லாது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

இது நாள் வரையில் பனிப்போராக நடைபெற்று மோதல் நேற்றைய தீர்மானத்தின் மூலம் வெளிப்படையாக வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் அளவிற்கு வெடித்துள்ளது. தடம் மாறாமல் செல்லும் வரை பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரச்னை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி அணியின் தீர்மானம் குறித்து நேற்று பேசிய தினகரன், அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மான கடிதத்தில் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தற்போது அதிமுக என்ற கட்சி பெயரையும், சின்னமான இரட்டை இலையையும் யாரும் பயன்படுத்த கூடாது. ஆனால் அதனை மீறி எனக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டுள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். 420 எனப்படும் மோசடி வேலையை ஒத்த செயலாகும் இது என்றார். 5 ஆண்டுகள் ஆட்சி நிலைக்குமா என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், 2021ஆம் ஆண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தேவைப்பட்டால் ‘அறுவை சிகிச்சை’ செய்ய தயங்க மாட்டேன்..” என்றும் கூறினார் தினகரன்.

இதை கேட்டு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். போலி மருத்துவர் கேசில் தினகரனை உள்ளே பிடித்து போடலாமா என்று எடப்பாடி தரப்புடன் காவல் துறை ஆலோசனை செய்து வருகிறது. சிலர் ஓவராக பேசும் நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயா கருணாவுக்கு செய்தது போல் குரல்வளையில் ட்ரக்கியாஸ்டமி செய்யவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். சமீபத்தில் விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் சை சந்திக்க கத்தியுடன் வந்த நபர் தினகரனின் ஆளாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. தினகரனின் தொண்டர் படையும் கடைசி பஸ்சை பிடித்து ஊருக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். மோடி பாணியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்ய தினகரன் கிளம்பியுள்ளது அதிமுகவினரிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

பகிர்

There are no comments yet