சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75வது ஆண்டு பவளவிழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விழாவில் அனைவரும் பேசி முடித்த பிறகு இறுதியாக பேச அழைக்கப்பட்ட கமல், “விழா அழைப்பிதழை என்னிடம் கொடுத்தபோது, விழாவுக்கு ரஜினியும் வருகிறாரா என்று கேட்டேன். அவர் பார்வையாளராக அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினி வந்தால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடலாம்; வம்பில் மாட்டிக் கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன். இந்த விழாவில் ரஜினி பேசுகிறாரா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். நானும் பேசவில்லை என்று சொல்லி அனுப்பிய பின் கண்ணாடியில் என் முகம் பார்த்து யோசிக்கும்போது, ‘அட முட்டாளே, எவ்வளவு பெரிய வாய்ப்பை
இழக்கிறாய், இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள் என்று தோன்றியது. தற்காப்பு முக்கியமல்ல; தன்மானம்தான் முக்கியம். உன் கருத்தை கூற இந்த மேடையை தவிர வேறு எது இருக்க முடியும், பயந்து ஒதுங்காதே’ என்று எண்ணினேன் வந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய கமல், இந்த விழாவுக்கு வருவதால் தான் தி.மு.கவில் சேரப் போகிறேனா என்று பலரும் கேட்பதாகவும், சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி தனக்கு தந்தி மூலம் கட்சியில் சேர்கிறாயா என்று கேட்டபோதே சேர்ந்திருப்பேன் என்றும் தெரிவித்தார். ஆனால், அந்தத் தந்திக்கு இதுவரை தான் பதிலளிக்கவில்லை என்றும், அவரும் அதற்குப் பிறகு அதைப் பற்றிக் கேட்கவில்லை என்றும் கமல் கூறினார். ஆனந்த விகடன் இதழை ‘பூணூல்’ பத்திரிகை என முரசொலி கிண்டல் செய்திருப்பதாக அந்த இதழின் ஆசிரியர் பா. சீனிவாசன் பேசியதைச் சுட்டிக்காட்டிய கமல், அவரே விழாவுக்கு வந்திருக்கும்போது பூணூலே இல்லாத தான் விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் என்று கேள்வியெழுப்பினார். “இதோடு முடிந்தது திராவிடம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜன கன மன பாட்டில் திராவிடம் என்ற சொல் இருக்கும்வரை இது இருக்கும். திராவிடம் என்பது இங்கே தமிழகம், தென்னகத்தோடு முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும், மானுடவியல் பற்றியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாடு தழுவியது இந்த திராவிடம்” என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன். குறித்து இந்த பேச்சின் மூலம், ‘ரஜினியை முட்டாள்’ என கமல் கூறியதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. மத்திய பாஜக அரசை பகைத்துக் கொண்டால் வருமானவரி ரெய்டு வரலாம் என்று அஞ்சியே ரஜினி, இக்கூட்டத்தில் பேசவில்லை. அதைத்தான் கமல் மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை ரிலீசான மருமகன் தனுஷின் வி.ஐ.பி-2 படத்தின் பிரிவியூ ஷோவில் கப்சா நிருபரிடம் பேசினார். “நான் முரசொலி விழாவிற்கு போயிருக்க கூடாது. கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்பதுபோல் முதலமைச்சர் நாற்காலி கனவில் விழாவில் கலந்துகொள்ளப் போய் கமலிடம் செருப்படி பேச்சை வாங்கி வந்து விட்டேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கமலுடன் இணைந்து நடித்ததை நிறுத்தியது போல் இனி கமல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன் இது என் மனைவி லதா மீது ஆணை.. மோடியை நினைத்தால் ஒரே பயமாக இருக்கிறது..அதான் பம்மி விட்டேன், அதையும் கமல் வழக்கம் ட்விட்டரில் ‘விமாமல் பம்மாமல் ஆவன செய். புரட்சியின் விது தனிச் சிந்தனையே. ஓடி என்னைப் பிந்தள்ளாதே களைதெனைத் தாமதிக்காதே கூடி நட வெல்வது நானில்லை நாம்’ என்று கூட்டு சேர சொல்கிறார்.” என்றார்.
இப்பேர்ப்பட்ட பரபர பேச்சுக்கள் நிறைந்த முரசொலி விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக, நமது நிருபர் பார்த்தது, கேட்டது, படித்ததுகளை கீழே பாயிண்ட் பை பாயிண்டாக தருகிறார்.
1. முரசொலி விழாவில் கமல் மேலே மேடையில் அமர்ந்திருக்க ரஜினி கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்
2. துக்ளக் விழாக்களுக்கு ரஜினி சென்று முன் வரிசையில் அமர்ந்தபோது சோ விற்கு நெருக்கமானவர் என்று தெரிந்தது, முரசொலி விழாவில் முன்வரிசையில் அமர்ந்தபோது ரஜினி திமுகவை விட்டு விலகியிருக்க விரும்புவது புரிகிறது ஒரு செயல் இரண்டு அர்த்தம்
3. அரசியலுக்கு வரப்போவதில்லையென்பதால் புகுந்து விளையாடுகிறார் கமல். வருகிற எண்ணமிருப்பதால் பதுங்கி காய் நகர்த்துகிறார் ரஜினி.
4. மேடையில் இருப்பவர் தள்ளப்படுவார் தந்திரமாக கீழேயிருப்பவர் ஒரங்கட்டப்படுவார் யாரோ ஒரு அதிமுக பிரமுகர் பாஜக தலையிடம் முணுமுணுத்தது காதில் விழுந்தது.
5. யாரையும் அண்ட்ரெஸ்டிமேட் பண்ணுவதில் திமுகவிற்கு ஈடு இணையே கிடையாது – முதலில் எம்ஜிஆர் அப்புறம் ஜெ இப்போ கமல் ரஜினி.
6. விழாவில் பேசிய தினமணி ஆசிரியர் வைத்தியனாதன், மாற்றுக் கட்சியினரையும் விழாவுக்கு அழைத்த மு.க.ஸ்டாலின் பண்பு பாராட்டுக்குரியது என்று திமுகவினர் மான ரோஷம் இல்லாதவர்கள் கூட்டணிக்காகவும் ஓட்டுக்காகவும் எந்த அளவிற்கும் கீழே இறங்கி வேலை செய்வார்கள் என்று சொல்லாமல் சொன்னார்.
7. பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்த்தார். ஆனால் இந்து ராம் முரசொலி விழாவிற்கு அழைக்கப்பட்டார். கொள்கைகள் குப்பைக் கூடையில் நாறின.
8. முரசொலி பவள விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம் தான் முக்கியம் என்று பேசினார். இதை செல்லமாக கண்டித்த நெட்டிசன்கள் கமலின் கட்டிப்பிடி புகைப்படங்களையும், முத்தக் காட்சிகளையும், தொகுத்து சமூக வலைதளங்களில் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
9. சந்தடி சாக்கில் திமுகவில் ‘டவுசர்’ பாயான உதயநிதியை மேடை ஏற்றி வாரிசு அரசியலுக்கு அச்சாரம் போட்டார் செயல் தலைவர் ஸ்டாலின்.
10. மேடையில் வேஷமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் அமர்ந்திருக்க, வேஷத்துடன் புல் மேக்கப்பில் கறுப்புக் கண்ணாடியுடன் ஸ்டாலின் அமர்ந்திருந்தது, வேதனை அளிப்பதாக ஒரு சினிமா-கம்-அரசியல் பிரமுகர் முகம் சுழித்தார்.
கடைசி செய்தி: இன்றும் சென்னை நந்தனம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இன்று பெய்த கனமழையின் காரணமாக விழாப்பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், மீண்டும் பிரம்மாண்டமாய் பவளவிழா பிரம்மாண்டமாய் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கும். தேவைப்பட்டால் அந்த விழாவிலேயே இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். ரஜினியை வசைபாட கமல்ஹாசனிடம் மேலும் ஸ்கிரிப்ட் தயார் செய்ய சொல்லி உள்ளோம், அது நேற்றை விட டெரராகவும் காட்டமாகவும் இருக்கும். அதைக் கேட்டு ரஜினியின் அரசியல் ஆசையே அஸ்தமனமாகும், ஆசை அற்றுப்போய்விடும்.” என்றார்.
நன்றி: பல முகநூல் பதிவுகள்
There are no comments yet
Or use one of these social networks