மோடி ஆதரவுடன் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டாக கட்டப்பட்டுள்ள இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, குழந்தைகள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனம், பண நிலுவை காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ரூ.70 லட்சம் பாக்கி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக குளறுபடியின் காரணமாக 63 குழந்தைகள் இறந்த வெள்ளிக்கிழமையன்று இந்த மருத்துவமனையின் பெயர் தலைப்பு செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது. மேலும், குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதேவேளையில், குழந்தைகளின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுத்துள்ளது. ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானவை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருவதற்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் கடிதத்தை ஆக்ஸிஜன் விநியோக நிறுவனம் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு எழுதியுள்ளது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது இருவரும் வடநாட்டு உங்கள்நியூஸ் பிரிவு ‘கப்சா’ நிருபரிடம் கூட்டாக பேட்டி அளித்தனர். “இறந்தவர்கள் குழந்தைகளாக போய்விட்டனர். இதுவே பசுக்களாக இருந்திருந்தால் சுதந்திர தின சூட்டோடு சூடாக ஒரு பெரிய கலவரத்தை உண்டு பண்ணி ரத்தம் பார்த்து ரசித்திருக்கலாம். குஜராத் கலவரம் போல இதுவும் ஒரு திட்டமிட்ட படுகொலை மாதிரி தான். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்னை பதவி விலகச் சொல்கிறார்கள். ஆனால் கேப்மாரி நான் போனால் இன்னொரு மொள்ளமாரி வந்து விடுவார். அதற்கு மோடிஜி கேரண்டி. மோடிஜி என்னைப் போன்ற பண்டாரப் பரதேசிகளை ஆளவிட்டு தளிர்களை அழித்து குளிர்காய்கிறார். மக்கள் எங்களை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்து எங்கள் உயிர் வளியை (ஆக்சிஜன்) பறிக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆகஸ்ட் 15 சுகந்திரதினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் இந்தியாவை தாக்க முயற்சி என்று அனைத்து ஊடகங்களையும் கூவ சொல்லி இருக்கிறோம், அதற்கு அச்சாரமாக சுதந்திர தினத்தன்று முஸ்லிம் மதரசாக்களில் தேசியக் கொடி ஏற்றி அதை வீடியோ போட்டோ எடுத்து அரசுக்கு அனுப்ப சொல்லி, மதவாததை கிளப்ப உச்சேசித்துள்ளோம்” என்றார். மோடியும் ஆம் என்பது போல் தலையாட்டிக் கொண்டே நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

Source: BBC, The Hindu Tamil

பகிர்

There are no comments yet