Reproduced from தோழர். ஆலஞ்சி
அதிமுகவை பிளவுபடுத்தி ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்த எண்ணிய எண்ணம் நிறைவேறாமல்.. எடப்பாடியை வைத்து கச்சியதாமாய் காய் நகர்த்த.. அந்த எடப்பாடியும் மோடியில் காலில் விழுந்து கிடந்ததில் பெருமகழ்ச்சி கொண்ட பெரியண்ணன்.. இவர்களை வைத்தே ஆட்சி நடத்தலாமென்றிருந்த எண்ணுகையில்.. தினகரன் புதியதொரு அணியாய் உருவெடுக்க .. எங்கே கைவிட்டுபோகுமோ என அஞ்சி பன்னீரையும் எடப்பாடியையும் சேர்ந்திருக்க உத்தரவிட்டிருக்கிறார்.. மோடி..
..
ஆனால் மேலூரில் பிரமாண்டமான கூட்டத்தை காட்டி தினகரன் நான் தான் அதிமுக என்கிறார்..அதுதான் உண்மையும் கூட.. எடப்பாடியோ பன்னீரோ.. யாருக்காவது அடிமையாக இருந்தே பழக்கப்பட்டவர்கள்.. வேறொருவர் இசைக்கு ஆடுகிறவர்கள் சுயமாக எழுந்துநிற்க கூட தைரியமோ பலமோ இல்லாதவர்கள் ..ஆனால் அதிகாரம் இருப்பதால் இவர்கள் ஆடுகிறார்கள் .. இவர்களின் ஆட்டம் பேட்டரி பவர் இருக்கிற வரைதான்..
..
திமுகவிற்கு எதிரான ஒரு கட்சியென்றால் அது அதிமுகதான் அதுவும் தினகரன் தலைமையில் இயங்குகிற கட்சிதான்.. மற்றவர்கள் எதற்கும் உதவாத அடிமாடுகள்.. அவர்களை வைத்து பின்வாசல் வழியாக நுழைய நினைக்கும் பாஜகவை ஆரம்பத்திலேயே தலையை திருவி தூக்கியெறிய திமுகவிற்கு எதிரியாக ஒருவர் வேண்டும் அந்த இடத்தை பாஜகவாலோ.. பிற உதிரிகளாலோ முடியாது .. அது நிச்சயமாக தினகரனால் மட்டுமே முடியும்..
எங்களுக்கும் பலமான எதிரிதான் தேவை.. எதற்கும் உதவாதவர்களோடு மோதுவது கூட இழுக்கு.. எங்களுக்கு எதிராக நிற்க கூட ஒரு தகுதிவேண்டும்.. அது நிச்சயமாக பன்னீருக்கோ பழநிசாமிக்கோ..பாஜகவிற்கோ இல்லை..
..
எஜமான் தூக்கியெறியும் கறித்துண்டிற்காக குரைக்கிறவர்களாக தெரிகிறார்கள்.. எஜமானிடம் மண்டியிட்டு அவர்தம் கட்டளையை நிறைவேற்ற போட்டிபோடும் அடிமைகளைவிட..
அளவிற்கு மீறி ஆடாத .. தினகரன் தேவலை..
இப்போது மேலூரில் கூடிய கூட்டம் அதிமுக என்றால் யார் என்று கட்சிக்காரன் தீர்மானித்திருப்பதை காட்டுகிறது..
நல்லது..
காட்டிகொடுக்கும் நயவஞ்சகன் பன்னீரையோ.. அல்லது குழிப்பறித்த பழநிசாமியையோ அதிமுககாரன் விரும்பவில்லை என்ற செய்தி பாஜக பெரியண்ணன்களுக்கு புளியை கரைத்திருக்கும்..
எது எப்படியோ ஆண்டிகாவி ஓகேதான்..
There are no comments yet
Or use one of these social networks