சென்னை: பிக்பாஸ் ஒளிபராகத் தொடங்கிய நாள் முதல் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதங்கள் சமூக வலைதளங்களில் எழத்துவங்கி விட்டன. தமிழகத்தில் தற்போது முக்கியமானதாக கருதப்படும், விவசாயிகள் பிரச்னை, கதிராமங்கலம் போராட்டம், டாஸ்மாக் சூறையாடல், நீட் தேர்வு விவகாரம் போன்றவற்றில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதாக மறைமுக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஆடியோக்களும், வீடியோக்களும் வாட்சப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெகுவாகப் பகிரப்படுகின்றன். வேறு விஷயங்களைப் பற்றி சிந்திக்க விடாமல், இந்த நிகழ்ச்சியை பற்றி அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், டீக்கடை உட்பட அனைத்து இடங்களிலும் பேசாதவர்களே இல்லை எனலாம், அப்படி பேசாமல் இருந்து ஒரு பெருங்குற்றம் போல் கருதப்படுவதும் உண்மையே.

இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சி பற்றிய வரலாற்றை சற்று பார்த்துவிட்டு தமிழ் பிக்பாசுக்கு வருவோம். ‘பிக்பிரதர்’ என்ற பெயரில் ஜான்-டி-மோல் என்பவரால் வடிமைக்கப்பட்டு நெதர்லாந்தில் 16 செப் 1999ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த நிகழ்ச்சி ‘வெரோனிகா’ என்ற சேனலில் ஒளிபரப்பாக துவங்கியது. ஆரம்ப காலத்தில் வீடு மிகவும் சாதரணமாக இருந்தது. நிகழ்ச்சி வெற்றியடைந்ததும், மிகவும் பெரிய அளவில் செட் போடப்படுகிறது. போட்டியாளர்கள் ‘அவுஸ்மேட்ஸ்’ என்றழைக்கப்படுவார்கள். இவர்கள் வெளியுலக தொடர்பில்லாமல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் 100 நாட்கள் வாழ வேண்டும். போட்டியாளர்கள் வாரம் ஒருவராக வீட்டில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். இறுதியாக ஜெயிப்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். ‘பிக் பிரதர்’ எனப்படும் நிகழ்ச்சியின் கான்செப்ட் ‘1984’ என்ற ஜார்ஜ் ஆர்வெல்ஸ் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. இதுவரை 387 சீசன்கள் 57 நாடுகளில் ஒளிபரப்பப் பட்டுள்ளது. சமூக நோக்கில் பார்க்கும்போது பிக் பிரதர் நிகழ்ச்சி எனப்படுவது தனிமனித மனநிலையை சோதிக்கும் ஒரு நிகழ்ச்சி என் தயாரிப்பாளர்களால் கூறப்படுகிறது. எடிட் செய்யப்பட்டு நாடகம் போல் ஒளிபரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது, சில நாடுகளில் பணம் செலுத்தி நிகழ்ச்சியின் continuous feed எனப்படும் தொடர் படப்பிடிப்பை பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வோரிடையே அவ்வப்போது காதல் மலர்வது வாடிக்கை. இவர்களின் நடவடிக்கைகளை ஒளிபரப்புவது என்பது நாட்டிற்கு நாடு வேறுபடும். வெளியுலகத் தொடர்பு கிடையாது என்பதால், தொலைக்காட்சி, ரேடியோ, இண்டெர்னெட் கிடையாது. எழுது பொருட்கள், புத்தகங்கள் கொடுக்கப்பட மாட்டாது. சில நாடுகளில் எழுதிவிடுவார்கள் என லிப்ஸ்டிக் ஐலைனர் கூட அனுமதிக்கப்படுவது இல்லை.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கான்செப்ட் உண்டு, rich and poor கான்செப்ட் படி வசதியானவர்களையும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களை ஒன்றாக அடைத்து வைத்து ஒருபுறம் வசதியான போர்ஷனும் சுமாரான போர்ஷனும் அமைத்து, வீட்டிலுள்ள வசதி வாய்ப்புகளுக்காக சண்டை மூட்டி விடுவார்கள். பிரேசிலில் இன்னொரு சீசனில் ஒரு ஷாப்பிங் மாலின் நடுவில் கண்ணாடி வீடு ஒன்றை அமைத்து, ஒருவார காலம் ஹவுஸ்மேட்டுகளை ‘வாழ’ வைத்தார்கள். Evil Big Brother 2004ஆம் ஆண்டு வில்லத்தனமான பிக் பிரதர் நிகழ்ச்சியை நடத்தினார், கடுமையான தண்டனைகள் வழங்குவது, கொடுத்த prize moneyயை பிடுங்கி விடுவது எல்லாம் உண்டு. இன்னொரு சீசனில் இரட்டையர்களை ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டுக்குள் அனுப்பி மற்றவர்கள் கண்டுபிடிக்கிறார்களா என சோதித்தார்கள். Best friend கான்செப்ட் படி இரண்டிரண்டு பேராக evict செய்யப்பட்ட ட்விஸ்டுகளும் உண்டு. BigMotherஇல் ஒன்பது ஜோடி அம்மா-மகள்கள் பங்கேற்றனர். Bigboss – double trouble இதில் இரண்டு ஹவுஸ்மேட்டுகளின் மணிக்கட்டு இணைக்கப்பட்டிருக்கும், ஒன்றாக அமர சேர், படுக்கை, சாப்பாட்டு மேஜை, டாய்லெட் என அனைத்து உண்டு. அல்பேனியா சீரிசில் பத்து செட் கணவன் மனைவிகள் வந்து வாழ்ந்துவிட்டுப் போனார்கள். அர்ஜிண்டினாவில் வீட்டிற்குள் ஒரு டெலிபோன் வைக்கப்பட்டது, வாரம் ஒரு முறை 10 வினாடிகள் ஒலிக்கும். ரிசீவரை எடுக்கும் ஹவுஸ்மேட், பிக்பிரதர் சொன்னது எதுவானாலும் செய்யவேண்டும் நல்லதோ கெட்டதோ இல்லாவிட்டால் எவிக்.ஷன் தான். Fake evictions அதாவது வெளியில் அனுப்பப்பட்டவர் மீண்டும் வீட்டுக்குள் வருவதும் உண்டு. முந்தைய சீசனில் பங்கேற்றவர்கள் அடுத்த சீசன்களில் ஹவுஸ்மேட்டுகள் போர்வையில் தனி சம்பளத்திற்கு டிரெயினர் வேலை பார்த்ததும் உண்டு. Confession Roomஇல் ஒரு சிவப்பு பட்டன் வைக்கப்பட்டு அதை அழுத்துபவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியற அனுமதிக்கப்பட்ட வடிவமும் உண்டு. Hotel Big Brother இதில் சில சமையல்கலை வல்லுனர்கள் ஒரு ஓட்டலை நிர்வகித்து அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக அளித்தார்கள். இவ்வளவு அலப்பறைகள் பிக்பாசில் உண்டு ஆனால் இது Survive! என்ற நிகழ்ச்சியின் காப்பி என்று வழக்கு தொடரப்பட்டு பெரும் தொகை அபரதாமாக விதிக்கப்பட்டது எத்தனை பேருக்கு தெரியும்.

Survive! நிகழ்ச்சியின்படி ஒரு தீவில் விடப்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உணவு இருப்பிடம் போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு உயிர் வாழ வேண்டும். மறைத்து வைக்கப்பட்ட காமிராக்கள் படம் பிடிக்கு. BigBrother SouthAfrica வீட்டில் கற்பழிப்பு சம்பவமும் அரங்கேறியது. பிரேசிலில் ஒரு நள்ளிரவு பார்ட்டிக்கு பின் நடந்த பாலியல் வன்முறைக்கு பின்னர் செட்டை உடைத்துக் கொண்டு போலீஸ் வந்து ஆடவர் ஒருவரை கைது செய்த கதையும் உண்டு.

முதன்முதலில் பிக்ப்ரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகப் பிரபலம் அடைந்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. ஜேட்கூடி என்ற பிரபல பெண்மணி ஷில்பா மீது நிறவெறி தாக்குதல் நடத்தினார் என்று சர்ச்சை கிளம்பியது. பல ஸ்பான்சர்கள் பின்வாங்கினார்கள். நாடு முழுவதும் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. ஓவியாவுக்கு முன்னோடி ஷில்பா ஷெட்டியே.
சரி, இப்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு வருவோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்களை மனநோயாளிகள் போல நடிக்க வைத்தனர். இதனை பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் கண்டித்துள்ளார். மனநலை குறித்து பல மூட கருத்துக்கள் மக்கள் மத்தியில் உலவும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேடிக்கை என்னும் பெயரால் மட்டமாக மடத்தனமாக சித்தரிப்பும் ஒளிபரப்பப்பட்டது. வியாபார நிமித்தம் கமல் இதை விமர்சிக்காமல் விட்டுவிட்டாலும் வேறெதாவது தளத்தில் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என் தெரிவித்தார். மற்றபடி பிக்பாஸ் வெட்டில் நடந்தவற்றை அனைவரும் அறிவோம் என்பதால் தனியாக சொல்லத்தேவை இல்லை.

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்ட நாள் முதல் அந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது விஜய் டிவி நிர்வாகத்தை வெகுவாக அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. பலர் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டனர். ஆரம்பத்தில், நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் ஜூலியானாவால் எகிறியது. ஆனால் அவரது செயல்பாடுகள், புறம் கூறுதல், பொய் பேசுதல் ஆகியவற்றைக் கண்ட மக்களுக்கு அவரை பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மிகவும் நேர்மையாக, சிறு பிள்ளை போல் இருந்த ஓவியாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது. இதனால் தொடர்ந்து 4 அல்லது 5 முறை எவிக்ஷனுக்கு வந்தாலும் அவரை பொதுமக்கள் ஓட்டு போட்டு வெளியேற விடாமல் காத்தனர். பொதுமக்கள் ஆதரவுடன் வலம் வந்த ஓவியாவுக்கு ஆரவுடனான காதல் பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவராகவே வெளியேறிவிட்டார். அதுமுதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் அடிவாங்கியது. ஏற்கனவே நடிகை பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். எனினும் டிஆர்பி ரேட் எதிர்பார்த்த அளவுக்கு கூடவில்லை. எத்தனை நடிகைகளை அழைத்து வந்தாலும் நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்றால் மட்டுமே பார்ப்போம் என்று ரசிகர்கள் முடிவு கட்டி உள்ளனர். இதுதொடர்பாக டுவீட்டுகளும் கமல்ஹாசனின் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் ஒருவரை வீட்டுக்குள் அனுப்பினால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கும் என்று விஜய்டிவி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ‘மாமா’க்கள் கருதுகின்றனர். தற்போது ‘காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியல் புகழ் பிரியா பவானிஷங்கர் அல்லது ‘அட்டகத்தி, எதிர்நீச்சல்’ ஆகிய படங்களில் நடித்த நந்திதா ஆகியோரில் ஒருவரை உள்ளே அனுப்ப இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இருவரில் யார் என்பது குறித்து விரைவில் விஜய் டிவி ‘மாமா’க்கள் முடிவெடுபார்கள் என தெரிகிறது.

பகிர்

There are no comments yet