சென்னை : தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலா என்பதில் இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை. நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தடை விதிக்காமல் முடித்து வைக்கப்பட்டுவிட்டன. தமிழக அரசின் 85 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது,

சுப்ரீம் கோர்ட்டும் இந்த தடையை நீக்கவில்லை. இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கும் என்று தமிழக மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை, அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசால் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். மாணவர்கள் எதிர்காலம் பற்றியது என்பதால் நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து காலம் தாழ்த்தாமல் உடனே பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் (வழக்கம்போல்) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன், “நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், மாணவர் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள்” என்று அதிரடியாக டுவீட்டியுள்ளார். இந்த ட்வீட்டை பார்க்கும்போது கமல்ஹாசன் திமுகவின் கைக்கூலி என்பது தெளிவாகிறது. முரசொலி பவளவிழாவில் மேடையில் அமர்ந்தும் உரை நிகழ்த்தியும் திமுகவில் சேர 1983 ஆம் ஆண்டே அழைப்பு வந்ததாகவும் கூறிய கமல் முன்னதாக ஸ்டாலின் ‘தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி நடக்கிறது’ என் கூறிவருவது போல் ‘குதிரை பேரம்’ என்ற சொல்லாடலை பயன்படுத்தி தான் ஒரு திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பதை நிரூபித்து விட்டதாவும், அதனால் ஆளும் அதிமுக அரசில் ஏற்கனவே ஒபிஎஸ்சின் வன்மத்தை சம்பாதித்த கமலுக்கு எடப்பாடியிடமிருந்தும் மிரட்டல்கள் வருவதாகவும், கப்சா நிருபர் தெரிவித்தார். விஸ்வரூபம் பிரச்னையின்போது ஜெயா மிரட்டியது போல் ஒட்டுமொத்த ஆளும் அதிமுக இணைந்து விஸ்வரூபம்2 வெளியிட விடாமல் தடுக்க புதிய சென்சார் போர்டு மெம்பர், பழைய லிவிங்-டு-கெதர் கவுதமியிடம் பேசி வருவதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet