சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் வரும் 19-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

இதற்காக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பெயர் இடம்பெற்றுள்ளது. வாழ்த்துரை பிரிவில் கருணாநிதியுடன், தி.மு.கவைச் சேர்ந்த ஆடலரசன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. திருவாரூர் வன்மீகபுரத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-யுமான தம்பிதுரையும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு அதிமுக அம்மா கட்சி அடிமை நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது: எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரால் ஆட்சிக்கு வந்து பின்னர் அவரையே வசை பாடியவர் கருணாநிதி, ஜெயலலிதா செய்த அடாவடி ஊழலால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அந்த நன்றிக்கடனுக்காக கருணாநிதி விழாவுக்கு வந்து எம்.ஜி.ஆரை வாழ்த்த வேண்டும். இல்லையென்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய கருணாநிதிக்கு எடப்பாடி நெருக்கடி கொடுப்பர் என்றார். இதை கேட்ட திமுக தொண்டர், எடப்பாடியே இப்போ டெட் பாடியாகி மோடியிடமிருந்தும் தினகரனிடமிருந்தும் இடி வாங்குகிறார், இவர் பதவியே அந்தரத்தில் இவர் எங்கே கலைஞரின் பதவியை பறிப்பது என்று கலாய்த்தார்.

There are no comments yet