சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சைபெற்று வருகிறார் கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக்கொண்டனர். வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்துவந்தனர். இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில், ” சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சில பரிசோதனைக்குளக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு கழுத்தில் மாட்டப்பட்டுள்ள உணவு குழாய் டியூப் மாற்றப்படவுள்ளது. அவர் இன்னும் 2 மணி நேரத்தில் வீடு திரும்புவார் ” எனக் கூறினார்

மருத்துவமனைக்குள் நமது கப்ஸா நிருபர் நைசாக நுழைந்து அங்கிருந்த கப்ஸா டாக்டரிடம் இது குறித்து கேட்ட போது, கலைஞரை அட் லீஸ்ட் பார்லிமென்ட் எலெக்ஷன் வரைக்குமாவது நல்லா பார்த்துக்கொள்ள சொல்லி உத்திரவு. அடுத்த சட்ட மன்ற தேர்தல் வரைக்கும் இருந்தால் மீண்டும் நான் தான் முதல்வர் வேட்பாராளர் என்று கிளம்பிவிடுவார் என்று ஸ்டாலின் பயப்படுகிறார்.எனவே இங்குள்ள மருத்துவர்கள் கலக்கத்தில் இருக்கிறோம் என்றார்.

பகிர்

There are no comments yet