சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பின் அவருக்கு தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து சிறிது நேர கண்காணிப்பு மற்றும் ஓய்விற்கு பின் அவர் கோபாலபுரம் வீடு திரும்பினார்.

கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு, டிராக்கியோஸ்டமி எனப்படும் (ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் செய்த அதே) சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான செயற்கை குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். அவருடன் ராசாத்தி , கனிமொழி, தமிழரசு மற்றும் செல்வி ஆகியோர் சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகளும், எம்.பி-யுமான கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதிக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை செயற்கை உணவு குழாய் மாற்றுவது வழக்கமான ஒன்று தான் என்றார் கருணாநிதி தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தை எட்டு மாதம் கழித்து பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். “உடன்பிறப்பே கடன்பிறப்பே” என்று முரசொலியில் எழுதினாலும் சரி, மேடையில் அவர் அழைத்தாலும் சரி திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிடும். விசில் அடித்து கரஒலி எழுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள் திமுக தொண்டர்கள். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைரவிழா கொண்டாட்டத்தின் போதும் கருணாநிதி வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரில்லாமலேயே விழா கொண்டாடப்பட்டது. இதேபோல முரசொலி பவளவிழாவும் கருணாநிதி இல்லாமலேயே கடந்து போனது.

இந்த விழாவிற்கு வந்த தொண்டர்கள் கருணாநிதியின் கரகரவென்ற ட்யூன் செய்யாத ரேடியோ குரலை கேட்கமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் அட்மிட் ஆன 4 மணி நேரத்தில் கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆன காரணத்தை கப்சா நிருபர் புலனாய்ந்துள்ளார். சற்று தெம்பு வந்ததும் வீல் சேரை இயக்கிய கருணாநிதி பழக்க தோஷத்தில் மருத்துவமனை தலைமைப் பகுதிக்கு சென்று அங்கிருந்த முதல்வர் (மருத்துவ டீன்) இருக்கை கேட்டதாகவும், அதிர்ச்சியடைந்த டாக்டர் உடனடியாக கருணாநிதியின் (மருந்துச்) சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது.

பகிர்

There are no comments yet