சென்னை: வாடகை பிரச்சினையில் மாணவர்களை வெளியேற்றி லதா ரஜினி நடத்தி வரும் பள்ளிக் கட்டிடத்தை அதன் உரிமையாளர் பூட்டியதால் கிண்டியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிண்டியில் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லதா ரஜினிகாந்த் லாப நோக்கோடு அதிக கட்டணம் வசூலித்து நடத்தி வருகிறார். சினிமாவில் ரஜினி நடித்துக் கொடுத்த பணத்தில் நடக்கும் இப்பள்ளியில், சினிமா பாடல் பாட ஆண்டுவிழாவில் கூட அனுமதி இல்லை. இது போன்ற பல பகல் வேஷ கட்டுப்பாடுகள் இருக்கும் ஆனால் பணம் பிடுங்குவதில் குறை இருக்காது. இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த அந்த இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, சினிமா படங்களில் வருவது போல தட்டுமுட்டு சாமான் பெட்டிபடுக்கையை தூக்கி தெருவில் எறிந்து வீட்டு உரிமையாளர் கதவை பூட்டுவது மாதிரி மாணவர்கள், ஆசிரியர்களை நிர்கதியாக தெருவில் வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டுள்ளார். அரசியல் செல்வாக்கு மிக்க ரஜினியையே இவர் எதிர்த்தது எப்படி என்று மர்மமாக உள்ளது.
பின்னணியில் யார் என்பது குறித்து கப்சா நிருபர் டீம் வேலை செய்து வருகிறது. இது தொடர்பாக உரிமையாளர் கூறும்போது, ‘‘கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பள்ளியின் இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் ரூ.10 கோடி வாடகை தொகையாக தர வேண்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது ரூ.2 கோடி தருவதாக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். அந்தத் தொகையை தருவதிலும் இழுத்தடித்தனர். அதனால் பள்ளிக்கு பூட்டு போடும் சூழ்நிலை உருவானது, இதன் பின்னணியில் பாஜக இல்லை..” என்று நாக்கை கடித்தபடி சொன்னார். ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் சார்பில் லதா ரஜினி வெளியிட்டுள்ள கப்சா செய்திக்குறிப்பில், ‘கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணத்தை அள்ள அள்ளக் குறையாமல் தரும் ‘அட்சய பாத்திரமாக’ நடத்தி வருகிறோம். இங்கு கல்வி இரண்டாம் பட்சம் தான். சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்பத் தகராறு காரணமாக பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல, இது ஒரு சுரண்டல். வாடகையே கொடுக்க விரும்பாத எனக்கே காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை அதிகரித்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே ஆலோசித்து, அந்த இடத்தை வாடகை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து காலி செய்ய முடிவெடுத்து இருந்தோம். அதற்குள் ஓராண்டாக சம்பளம் கிடைக்காத ஏதோ ஒரு ஆஸ்ரம் பள்ளி ஆசிரியர் போட்டுக் கொடுத்து விட்டார் போலுள்ளது. மேலும் இப்பிரச்சினையை பைசா செலவில்லாமல் பைசல் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பூட்டு போட்டதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள், வேளச்சேரியில் லதா ரஜினி லாப நோக்கோடு நடத்தி வரும் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரஜினி சினிமாக்களில் வருவது போல் ஒரே பாடலில் கோடீஸ்வர்னாகும் டெக்னிக்கை பயன்படுத்தி ‘நேற்று’ போட்டோ செஷன், ‘இன்று’ புதுக்கட்சி, ‘நாளை’ முதல்வர் நாற்காலி ரஜினிக்கு கிடைக்கும் என்றும், ஈசி சேரில் அமரும் தள்ளாத வயதில் ஈசியாக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமர்ந்தால் தமிழகத்தை சுரண்டலாம் திட்டமிட்டு வைத்திருந்தார் லதா ரஜினி. ஆனால் நடுவில் இந்த வாடகை பிரச்சினை வந்துவிட்டதால், ரஜினி நண்பர் வைரமுத்து மூலம் ஐநா வாய்ப்பு வாங்கி மகள் ஐஸ்வர்யா தனுஷ ஆடிய கண்றாவி நடனத்தை மீண்டும் ஆஸ்ரம் பள்ளி வாசலில் ஆட வைக்க உள்ளதாகவும், அப்படி ஆடினால் பூமி பிளந்து பூட்டு தானாகவே திறக்கும் என்றும் இந்த மந்திர ஜால நிகழ்ச்சியின் போது நிலம் பிளப்பது பூட்டு திறப்பது போன்ற கிராபிஸ் வேலைகளை கணவனை பிரிந்து வீட்டில் வாழாவெட்டியாக இருக்கும் சின்ன மகள் சவுந்தர்யா கவனித்துக் கொள்வார் என்றும் கப்சா நிருபரிடம் கூரினார்.
There are no comments yet
Or use one of these social networks