சென்னை: நடிகர் கமல்ஹாசன் எங்களது தர்மயுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சார்ந்த மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:”கமல் பொது விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நிகழ்ந்தபோது ஓபிஎஸ்ஸிடம் கமல் மூன்று முறை தொலைபேசியில் பேசினார். கமல் சொன்ன கருத்துகளைக் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் ஜல்லிகட்டு பிரச்சினைக்கு ஒரு உன்னதமான தீர்வு கண்டார். அப்போது கமல் ஓபிஎஸ்ஸிடம் நல்ல தொடர்பில் இருந்தார்.

இப்போது கமல் ட்வீட்டைப் பொறுத்தவரையில் 140 எழுத்துகளுக்குள் கருத்தை சொல்ல வேண்டி இருப்பதால் பல விஷயங்கள் இப்படியும் புரிந்து கொள்ளலாம் அப்படியும் புரிந்து அகொள்ளலாம் என்கிற மாதிரி உள்ளன. அதனால் நாங்கள் எப்போது ரியாக்ட் பண்ண வேண்டுமோ அப்போது மட்டும் ரியாக்ட் செய்கிறோம். முன்னதாக, கட்சியில் மலிந்திருக்கும் ஊழல் என்று கருத்து சொன்னதும் ஓபிஎஸ் வரவேற்றார். தற்போது முரசொலி மேடையில் இருந்துவிட்டு, ஊழல் பற்றி சொல்கிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணில், ஊழலின் உச்சகட்ட இடத்தில் நின்றுகொண்டு ஊழலை ஒழிப்போம் என்று கூறுவது போலித்தனமாக உள்ளது. அதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் அவர் கப்ஸா நிருபரிடம் கூறும்போது திமுகவையும், அதிமுகவும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்கும் தொனியில் கமல் ட்வீட்கள் இருக்கின்றன. கமல் பொது வாழ்வுக்கு பொதுவெளிக்கு வந்து எல்லாவற்றையும் முழுமையாகப் பார்க்க வேண்டும். அதிமுக-வின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர் எங்கள் தர்மயுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும். எங்கள் யுத்தத்தில் பங்குபெற வேண்டும். கமல் எங்களுக்கு ஆதரவு தந்தால் கவுதமிய மீட்டு அவரிடம் சேர்ப்பதற்கு அண்ணன் ஓபிஎஸ் தயாராக இருக்கிறார். வாரத்திற்கு இருமுறை டெல்லி சென்று மோடிக்கு உள்ளேன்ஐயா என்று சொல்லும் ஓபிஎஸ்சின் இந்த கோரிக்கையை மோடி நிச்சயமா நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

There are no comments yet