சென்னை : சென்னை கிண்டி-வேளச்சேரி மெயின் ரோட்டில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா நடத்தும் ஆசிரம் பதன்நிலை மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு. இந்நிலையில் பள்ளி செயல்படும் கட்டிடத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் லதா ரஜினிகாந்த் வாடகை செலுத்தவில்லையாம். அந்த வகையில் ரூ.10 கோடியாக தற்ேபாது வாடகை பாக்கி உயர்ந்துள்ளது. பலமுறை கேட்டு பார்த்தும் வாடகை பணம் வராத காரணத்தால் கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் முதல்கட்டமாக கட்டிட உரிமையாளருக்கு ரூ.2 கோடி வாடகை பாக்கி தருவதாக ஆசிரம் பள்ளி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அதன்படி கட்டிட உரிமையாளருக்கு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நான்கு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பள்ளியில் யாருமே இல்லை என்று கூறப்படுகிறது.

இதை பயன் படுத்திக் கொண்ட பள்ளி கட்டிடத்தின் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நேற்று முன்தினம் இரவு திடீரென பள்ளிக்கு உள்பூட்டு போட்டு சென்றுவிட்டார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும் அன்று இரவே மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி ஹால்டா சந்திப்பில் உள்ள மற்றொரு ஆசிரம் பள்ளிக்கு வரும்படி கூறினர். அதன்படி நேற்று காலை மாணவர்கள் மாற்று பள்ளிக்கு சென்றனர். இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், லதா ரஜினிகாந்த் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘சமீபகாலமாக நில உரிமையாளர்களின் குடும்ப தகராறு காரணமாக, நாங்கள் அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். பேசிய தொகையை விட வாடகையை அதிகரித்துள்ளனர். இது ஒரு சுரண்டல். எனவே பள்ளியை இடமாற்றம் செய்ய ஆலோசித்துள்ளோம். இப்பிரச்னையை முடிப்பது தொடர்பாக பேசி வருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சூப்புர ஸ்டார் ரஜினி நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில், புதிய இந்தியா பிறந்தது என்று சொல்லி செல்லாத நோட்டுகளை எல்லாம் செல்ல வைத்தேன். பின்னர் சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி, மோடிஜியின் காலை பிடித்தேன். சமீபத்தில் கூட எனக்கு பிடிக்காத வார்த்தை வேலை நிறுத்தம் என்று சொல்லி என் காலா படப்பிடிப்புக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டேன்.

நானும் என் மனைவி லதாவும் வறுமையில் வாடுகிறோம். ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாமல் கூழும், கஞ்சியும் குடித்து வயிற்றை கழுவுகிறோம். அதனால் தான் மனைவியின் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் டொனேஷன் வாங்கி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கிறோம். இப்போது இருக்கும் இடத்திற்கே வாடகை கொடுக்க வழியில்லை. இதெற்க்கெல்லாம் காரணம் சிஸ்டம் சரியில்லாதது தான்.

பிரதமர் மோடி அடுத்த பணமதிப்பிழப்பு கொண்டு வரும்போது இன்னும் கொஞ்சம் சுருட்டி, அந்த பணத்தில் எங்கள் கடனையெல்லாம் அடைத்து மாணவர்களை படைக்க வைப்போம் என்றார்.

There are no comments yet