சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள ஜெயா நினைவிடம் தற்பொழுது மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைப்பு அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக இரு அணிகள் தரப்பும் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அதே போல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது அணியுடன் அவரது இல்லத்தில் அலோசனையை முடித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மெரின கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் தற்பொழுது பொதுப்பணித்துறை சார்பில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமியும் ஓபிஎஸ்-சும் அங்கு வர உள்ளதாக கூறப்பட்டது. தற்போது மெரினாவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ச.ம.உறுப்பினர்கள் கூட்டம் கலையத் தொடங்கி உள்ளது. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மழை காரணமாக சந்திப்பு வேறு இடத்தில் நிகழுமா என்று தெரியவில்லை.

இந்த கூர்ந்து கவனித்து வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் கப்சா நிருபரிடம் டெலிபோனில் உரையாடினார். “ஆட்சி கவிழும் என் முதல்வர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது. சட்டசபையில் சட்டை எல்லாம் கிழித்து, மூச்சுக்கு முன்னூறு முறை மந்திர உச்சாடனம் போல் ‘ஆட்சி கவிழும்’ என்று கூறிப் பார்த்தேன். கலைஞர் பவள விழாவில் கமலை எல்லாம் காக்கா பிடித்து, அதிமுகவுக்கு எதிராக பேச வைத்தேன், ட்விட்டரில் எழுதும்படி பணித்தேன். புண்ணியமில்லாமல் போய்விட்டது. போதாக்குறைக்கு காவேரி மருத்துவமனை சென்ற கருணாநிதியும் செக்கு உலக்கை மாதிரி திடகாத்திரமான உடம்புடன் திரும்பி வந்து விட்டார் திமுகவில் எனக்கு எதிர்காலமே இல்லை..

பிப்ரவரி 7-ம் தேதி ஜெயா சமாதியில் ஓபிஎஸ் ஆரம்பித்த கரும யுத்தம் இப்போது சமாதியிலேயே முடிவுக்கு வந்து என் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்திற்கு சமாதி கட்டி விட்டார்கள். சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கைகுலுக்கி என்னை கார்னர் பண்ணி விட்டார்களே” என்று ஒப்பாரி வைத்தார்.

பகிர்

There are no comments yet