சென்னை: போயஸ் கார்டனில் ஜெயா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை கைப்பற்றி தமிழக அரசு அதை நினைவிடமாக ஆக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. நினைவிடமாக்கப்பட வேண்டுமென்றால் முதலில் அந்த வீடு அரசுடமையாக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். பாட்டியின் சொத்து என்கிற வகையில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இவர்கள் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் இல்லையென்பதால், வேதா இல்லத்தை அரசுடமையாக்குவதில் பெரிய அளவில் சட்டச் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.

தற்போது வீட்டில் இருந்தவர்களை அதிரடியாக வெளியேற்றி பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இறப்பிற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீடு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலா அவரது மரணத்திற்கு பிறகும் அங்கேயே வசிக்க தொடங்கினார். இது சசிகலா எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபாவுக்கும், அவரது சகோதரர் தீபக்குக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் சொந்தமாக இருக்க முடியும். சசிகலா எப்படி அதற்கு சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்வியும் எழுந்தது. ஜெயாவின் ரத்த சொந்தங்களான தீபா தீபக் இருவரும் இதற்கு ஆரம்பமுதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் யாரும் வசிக்க தயங்கினர். இதனால் ஆள் இல்லாத வீடாக அது மாறியது. சொத்து குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லமும் சிக்கியுள்ளது. இதனால் அது முடக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. கடந்த 2017 ஜூன் மாதம் தீபா போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைய முற்பட்டு களேபரம் நிகழ்ந்தது. இந்நிலையில், சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவிடமாக்க முடியாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கப்சா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு முன்பாக வாரிசுதாரர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அது தீபா தீபக். ஆனால் சின்னம்மா தயாரித்து கொடுத்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி சசிகலாவுக்கும் இளவரசிக்கும் வேதா நிலையம்தான் முகவரி. சசியின் முகவரி மட்டுமல்ல ஒரு வேலைக்காரியின் ‘சதி’யின் முகவரியும் கூட. ஜயாவிடம் சுருட்டிய அவர்களது உடைமைகள் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் இருக்கின்றன. தற்போது சசிகலாவும் இளவரசியும் சிறையில் உள்ளனர். அத்துமீறி நுழைபவர்களுக்கு கொடநாடு காவலாளிக்கு ஏற்பட்ட நிலை தான் உண்டாகும்.” என்றார். இதுகுறித்து திமுக செயல் கப்சா செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மர்மம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரியவர் பினாமி முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். இப்போது தமது முடிவை அவர் மாற்றியது ஏன்? தர்ம யுத்த்ம் என்னானது?

கருணாநிதியின் கதை வசனத்துக்கு ஏற்ப ஆட்சி நடந்த காலம் போய், டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றார்போல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.” என்றார். தற்போதையை நிலையில் வேதா இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.75 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாட்டியின் சொத்து பேரன்களுக்கு என்கிற வகையில் இந்தத் தொகையை அரசு தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க முன்வரலாம். ஒருவேளை அவர்கள் கூடுதல் தொகை கேட்டால், உண்மையான மதிப்பைவிட இரண்டு மடங்குகூட அதிகமாக வழங்க வாய்ப்பிருக்கிறது. இரண்டு மடங்கு கூடுதல் என்றால் ரூ.200 கோடி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து நினைவிடம் அமைப்பது அவசியமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. தீர்ப்புக்கு முன்னதாகவே அவர் இறந்து போனதால், தண்டனையிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு நினைவிடம் அமைப்பது சரியா என்கிற கேள்வியும் எழுகிறது.

வேதா இல்லத்தை அரசுடமையாக்க வழங்கப்படும் தொகை குறித்து முழுமையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டால், அதை எதிர்த்து சிலர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டவும் வாய்ப்பிருக்கிறது. தோல்வியே காணாத தமிழக மக்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய தலைவராக விளங்கிய பொன்மனச்செம்மல் அவர்களின் ராமாவரம் தோட்டமே இவங்க ஆட்சியில் பாழடைந்து போன நிலையில், இந்த வேதா நிலயத்தையா இவர்கள் பாதுகாப்பார்கள், இந்த மனித மிருகங்கள் தாங்கள் பிழைக்க என்ன வேண்டுமானும் செய்யும், இதுவும் மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் ஒரு கபட நாடகம் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

பகிர்

There are no comments yet