சென்னை: அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை திரும்புகிறார். அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருக்கிறது; அத்துடன் ஓபிஎஸ் அணியில் உள்ள 2 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளது. இதனால் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்புகிறார். மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே வித்யாசாகர் சசிகலா ஆட்சிமைக்க உரிமை கோரிய பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் ஓடி ஒழிந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

பகிர்

There are no comments yet