சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில்  பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால்  இதுவரை அது நிறைவேற்றபட்டாததால்   இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா செயல்பட முடியாத நிலையில் சிறையில் இருப்பதால்  கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்  ஒரு குழுவை நியமிக்க  முடிவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  ஆலோசனைக்கு பிறகு  மூத்த அமைச்சர்கள்  தங்கமணியும் வேலுமணியும் கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீசெல்வம் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தினர். 

இதை தொடர்ந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். அதனை தொடர்ந்து ஒ.பிஎஸ் அணியினர் தலைமை அலுவலகம் வந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். 6 மாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கைகுலுக்கி இணைந்தனர். இரு அணிகளும் இணைந்தது. பின்னர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறியதாவது: உலக அரசியலில்  அரங்கில் அ.தி.முக  சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும்  ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள்.எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளக்கும்.

அணிகள் இணைப்புக்கு ஒத்துழைப்பு தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மனிதில் இருந்த பாரம் குறைந்து விட்டது.அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது: அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் துணை ஒருங்கிணைப்பாளர்களாக  கேபி முனுசாமியையும், வைத்தியலிங்கத்தையும்  முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.மேலும் வழிகாட்டு குழுவில் 11 பேர் நியமிக்கபடுவார்கள். என கூறினார்.

இதையடுத்து இந்த இணைப்பிற்கு புரோக்கராக இருந்து செயல்பட்ட பிரதமர் மோடிக்கு அகில இந்திய அதிமுக அணிகள் இணைப்பு செயலாளர் பதவியை வழங்க எடப்பாடிக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்ததாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்

There are no comments yet