எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்தன. அந்த இணைப்பின் போது அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களா பொறுப்பெற்றுக்கொண்டனர். இந்தநிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியான நிலையில் அமர்ந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘சசிகலா கூறியதால் தான் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளித்தோம். அவர் எங்களைக் கேட்காமல் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது தவறு. கட்சியிலிருந்து சசிகலாவை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கவுள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

இரு அணிகள் இணைப்பு நடைபெற்ற நிலையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், 23-ம் தேதி செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும், தற்போது காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பகிர்

There are no comments yet