Credit: தோழர். ஆலஞ்சி

நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிறது எடப்பாடி அரசின் அலட்சியபோக்கால்.. ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு எதையும் செய்ய துணிந்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை அடகுவைத்தேனும்.. பதவியில் இருக்கவேண்டுமென்ற முதல்வரின் ஆசை நிராசையாக போகும் காலம் கனிகிறது..
..
மின் திட்டம் தொடங்கி நீட் வரை எந்தவித எதிர்ப்புமில்லாமல் தலையாட்டி பொம்மையாய் வீட்டிருக்கிறார் .. அரசு இயந்திரத்தை வேறு யாரோ இயக்குவது கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறவரை முதல்வராக இருப்பது வெட்ககேடு..
பதவி என்ற ஒற்றை குறிக்கோளோடு மானம் விடுத்து மண்டியிட்டு கிடக்கிறார்..ஒட்டுமொத்த தமிழகமே வெறுக்கிற ஒருவர் முதல்வராக இருப்பது கேவலம்.. ஒரு அரசிற்கு ஆதரவை திரும்ப பெறுவதாக சொல்லியும் பெருபான்மை இழந்த அரசை இன்னமும் அனுமதிப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல்.. எது செய்தாலும் ஊடகங்களோ பலமிழந்து நிற்கும் எதிர்க்கட்சிகளோ கேள்வி கேட்க போவதில்லை அப்படியே கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தும் யுக்தியை மத்திய அரசு பதவியேற்றதிலிருந்தே செய்துவருகிறது.. வெற்றிப்பெற்றவரை விலைக்கு வாங்கும் அயோக்கியதனத்திற்கு ஜனநாயகம் என பெயரிட்டு அழைப்பது படு அசிங்கம்..
..
தமிழகத்தில் எடப்பாடியை எதிர்க்கும் தினகரன் ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயர்கிறது..
தன் பதவி ஆசைக்காக தொண்டர்களை ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்கிறார்
நேற்றுவரை பன்னீரோடிருந்த செம்மலை..
அமிர்ஷா.தி.மு.க என்கிறார் தனியரசு.. தீடீரென அறந்தாங்கி பாண்டிக்கு தாவுகிறது.. சொந்த சமுதாய மக்களின் விமர்சனங்களால்..
ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் இருவரும் பாஜக என்ற பாம்பின் நிழலில் தவளைகள் போல் நிற்கிறார்கள் என்கிறார்
தமிமுன் அன்சாரி
..
நாற்பதை தொடுவதாக ஊடகங்களில் செய்தி கசிகிறது ஆனாலும் கவர்னர் ஊரை காலி செய்து போய்விட்டார்.. திரும்ப அழைத்தாலும் அலுவல்களை காரணம் காட்டி இழுத்தடிப்பார்..
என்னை அரசியலுக்கு இழுக்காதீர் என்கிற கவர்னர்.. எடப்பாடி பன்னீர் கைகளை பிடித்து இணைத்தபோது தெரியவில்லை தான் கவர்னர் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவனென்று..
..
ஒரே வழி நம்பிக்கையில்லா தீர்மானம்.. திமுக என்றில்லை காங்கிரஸ் கூட முன்மொழியலாம்..நீதிமன்றத்தை நாடி ஒரு கண்காணிப்பாளரை ஏற்பாடு செய்துக்கொண்டு சட்டமன்றத்தை கூட்டலாம் .. தீர்மானம் கொண்டுவர முறைப்படி அலுவலக செயலரிடம் மனு தந்தால் 15 தினங்களுக்குள் சட்டமன்றத்தை கூட்டியாக வேண்டும்
இனியும் பொறுத்திருப்பதில் பலன் ஒன்றுமில்லை.. இந்த அரசு தமிழ்நாட்டை தமிழனின் கலாச்சார பண்பாடடை ..தமிழர் தம் நலனை காலம்காலமாய் காத்து வந்த சமூகநீதியை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்..
..
எதிர்க்கட்சிகென்று சில பொறுப்புகள் உண்டு..
மக்களின் எண்ணவோட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இந்த அரசை தூக்கியெறியப்படவேண்டுமென்று ஏறக்குறைய எல்லோருமே விரும்புகிறார்கள் அதை செய்து முடிக்கவேண்டிய தலைச்சுமை நமக்குண்டு.. சதூர்யமாக காய்நகர்த்தப்படவேண்டும் இந்த கேவலமான அரசு
இனி எழுந்திருக்கவே முடியாதவாறு அடித்தமர்த்தவேண்டும் .. அதற்கான பணிகள் தொடங்கப்படவேண்டும்..
..
இனி இந்த அரசு தேவையில்லை..
..

 

பகிர்

There are no comments yet