புது டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவந்தது. இதற்காக அவசரச் சட்டம் இயற்றியது. இந்நிலையில் தான் அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்க மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பினால், மத்திய அரசு உதவி செய்யும்’ என தெரிவித்திருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கையாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த ஒத்துழைத்துள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பதால் மற்ற மாநிலங்களும் இதனை கேட்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் கூட்டணி அமைத்து நாடகம் நடத்தி வந்தன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்ட நிலையில், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு தயாரித்தது. அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்படும் என்றும், சட்ட அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டு பல மத்திய அமைச்சர்களை சந்திப்பது போன்ற நாடகத்தை நடத்தினர். தமிழக முதல்வரும் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்குக்காக வலியுறுத்தியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அத்தனையும் நாடகம் என்பது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இப்போது மேற்கொண்ட நிலைப்பாடு மூலம் உறுதியாகி விட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் நாடகமாடியிருக்கின்றன. தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் பல நாட்கள் முகாமிட்டிருந்ததெல்லாம் தங்களின் ஊழல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தானே தவிர நீட் விலக்கு பெறுவதற்காக அல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது. மருத்துவம் படிக்க விரும்பிய தமிழக மாணவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழக ஆட்சியாளர்களையும், மத்திய ஆட்சியாளர்களையும் தமிழ்நாட்டு மக்கள் நூற்றாண்டுகள் ஆனாலும் மன்னிக்க மாட்டார்கள்.
மோடி மற்றும் அவரது அரசாங்கம் ஆகியோர் தமிழ்நாட்டைத் கெடுக்க நீட் பிரச்சினையில் மாநில வாரியப் பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களைக் காட்டிக் கொடுக்கும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மோடியை தொலைபேசியில் அழைத்துக் கூப்பிட்டு, தன்னையும் பன்னீரையையும் வாழ்த்தி ட்வீட் செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதை விட மானங்கெட்ட ஜென்மங்களை எங்கும் பார்க்கமுடியாது.
There are no comments yet
Or use one of these social networks