சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ‘உணர்ச்சிகரமான’ கட்சிகள் அரங்கேறின. வைகோவும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் கைகளைப் பற்றிக்கொண்டனர். முன்பு காவேரி மருத்துவ மனையில் சந்திக்க வந்து ‘திகில்’ காட்சியாக செருப்பு வீசப்பட்டதால் சந்திக்காமல் சென்ற பிறகு தற்போது திமுக எதிர்ப்பாளர்களுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துள்ளார். வைகோ வந்தாச்சா அப்போ விடிஞ்சிடும் என்று கிசுகிசுத்த கப்சா நிருபரிடம் வைகோ கூறும்போது ” 29 ஆண்டுகள் கருணாநிதியோட நிழலாக இருந்தேன். ஒரு துரும்பு கூட அவர் மேல படாமல் பார்த்துக்கொண்டேன். கோபால்சாமியான என்னை வைகோ என்று முதல் முதலில் அழைத்தவர் கருணாநிதி. நான் ஈழத்துக்கு போன போது என் தம்பியை பறிகொடுத்து தவிக்கிறேன் என்று கலங்கிப் போய் கருணாதி சொன்னார். இன்று என் மனதுடைய அடி ‘ஆழத்தில்’ கருணாநிதி இருக்கிறார், இறுதி சுற்றுக்கு பிறகு ஆழத்திலா பஸ்பமா தெரியவில்லை. ஸ்டாலின் முடிவு செய்வார்.

முரசொலி பவள விழாவில் சங்குடன் வந்து கலந்து கொண்டு சங்கொலி முழங்க இசை மழை பொழிவேன். அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். திராவிட இயக்கத்தின் மணியோசைக் குரலாக கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும். இரண்டு மாதமாக கலைஞர் என் கனவில் வந்து கொண்டிருக்கிறார். ஏன் என்றே எனக்குத் தெரியவில்லை கனவில் ஆவியாக வந்து தொல்லை கொடுக்க வந்த பாவியை சந்தித்து நறுக் என்று நாலு கேல்வி கேட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். பகல் கனவு பலிக்காது. இரவு நேர கனவு நேரம் பொறுத்து பலன் அமையும் விடியற்காலை காணும் கனவு அப்படியே பலிக்கும். எனக்கு கனவு வந்த நேரம், நான் கனவில் கருணாநிதியை சந்திச்ச இடம் இரண்டையும் மதிமுக கட்சி விதிகளின் படி எதிர் வரும் காலங்களில் அதாவது உலகம் அழியும் போது கருணாநிதியுடன் செய்த ஊழல்களை வெளியிடும்போது வெளியிடுவேன். என் கையை பற்றிக்கொண்டார் கருணாநிதி. கருணாநிதி என் கையை விடவே இல்லை… பேச முயற்சித்தார், எனக்கு கண்ணீர் வந்தது… கருணாநிதியின் கண்களில் கண்ணீர் வந்தது.

நான் சென்று வருகிறேன் என்று கூறியபோது என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அந்த பார்வையில் ஆயிரம் முழக்கங்கள் அவரின் புன்னகையிலும், கண்ணீர் துளியிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன, அவை கருணாநிதியுடன் கலந்து மண்ணோடு மண்ணாகப் போகும் ஊழல் சரித்திரங்கள், மர்மங்கள்.. இக்கருத்துக்கள் மூலம், வரலாற்றில் முதல் முறையாக நலமுடன் இருக்கும் (பல்லாயிரக் கணக்கான வர்களுக்கு பல நூறு இரங்கற்பாக்கள் பாடி செக்கு உலக்கை போல உள்ள) ‘கலைஞருக்கே’ ‘இரங்கற்பா’ பாடிய சைகோ – வைகோ என்ற பாராட்டை பெற்றார். இதை முன்பு இவர் மீது செருப்பு வீச சொல்லி ‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி வைத்த செயல்தலைவர் முன்மொழிந்தார்.

பகிர்

There are no comments yet