சென்னை,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர்  வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை தாங்கள் விலக்கிக் கொள்வதாக மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் புதுச்சேரியில் உள்ள தனியார்  ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார்கள்.  புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ‘தி சன் வே மேனர்’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள்.

இந்தநிலையில்  திவாகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:

தனபால் முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காவிட்டால் 19 எம்எல்ஏக்களும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். தனபால் முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை பல எம்எல்ஏக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போது 60 எம்எல்ஏக்களும், 8 அமைச்சர்களும் எங்களோடு பேசி வருகின்றனர். எம்எல்ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தாமதித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இந்நிலையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet