சென்னை: சினிமாவில் இருந்து அரசியலுக்கு பலரும் படையெடுக்கிற நேரத்தில், அரசியல் பிரபலமாக இருந்து சினிமா உலகில் காலடி வைக்கிறார் வைகோ. சுதந்திரப் போராட்ட முதல் பெண் வீராங்கனையான சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை ஏற்கனவே ஆவணப் படமாக வைகோ வெளியிட்டிருக்கிறார். அதன் அடுத்தகட்டமாக, ‘வீரத்தாய் வேலு நாச்சியார்’ என்ற பெயரில் புதிய சினிமா படத்திற்கு கதை-வசனத்தை வைகோ எழுதுகிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீராம் சர்மா இயக்குகிறார். இயக்குனர் சீனு ராமசாமியின் மேற்பார்வையில் இந்தப் படம் தயாராகிறது. இதற்கிடையே தனக்குப் பிடித்த சினிமாக்களை விரிவாக பட்டியல் இட்டிருக்கிறார் வைகோ.

மாணவப் பருவத்தில் இருந்தே திரைப்படங்களைப் பார்ப்பது, என் மனதிற்கு மகிழ்வூட்டுகின்ற செயல் ஆகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். எட்டு வயதில், எங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள திருவேங்கடம் டூரிங் கொட்டகையில் நான் பார்த்த, ஜெமினியின் ‘சந்திரலேகா’, எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகியவை என் நெஞ்சை விட்டு நீங்காத திரைப்படங்கள் ஆகும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, வீட்டுக்குத் தெரியாமல் காம்பவுண்டுக் கேட்டைத் தாண்டிக் குதித்து, சைக்கிளில் சென்று இரண்டாம் ஆட்டத்தில் பார்த்த ‘மனோகரா’, ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படங்களும் என் மனதைக் கொள்ளை கொண்டவை ஆகும். பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது, ‘நாடோடி மன்னன்’, ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’, ‘சிவகங்கைச் சீமை’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கல்யாணப் பரிசு’ ஆகியவை என் உணர்வுகளைக் கூர்படுத்திய காவியங்கள் ஆகும்.

இறுதியாக, ‘இந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், ராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய் சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளைக் குவிக்கும். சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அது அந்த விருதுக்குத்தான் பெருமை!’ என குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

வைகோவின் இந்த திடீர் முடிவு ககுறித்து நமது கப்ஸா நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு சினிமாவில் தடம் பதிக்காதது தான். கலைஞருடன் நான் இருந்த போது எங்கே நான் சினிமாவில் நடித்து கதை வசனம் எளிதினால் எனக்கு பெயரும் புகழும் வந்து விடும் என்று ஸ்டாலின் சொன்னதால் என்னை கட்டிப் போட்டு விட்டார்கள்.

இப்போது நான் சுதந்திர பறவை. கலைஞர் எப்படி சினிமாவில் கதை வசனம் எழுதி ஆட்சியை பிடித்தாரோ அதே மாதிரி நானும் இப்போது சினிமாவில் கதை வசனம் எழுதி யாரவது ஒரு ஆச்சியையாவது பிடிப்பேன். இனிமேல் என்னை யாரும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக சொன்னார்.

There are no comments yet