சென்னை: தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசவிட்டு, தொடர்ந்து தினகரன் மவுனம் காத்து வருவது, அவரது அடுத்த நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அதிமுகவில் பிரிந்திருந்த ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் இணைப்புக்கான முயற்சிகளை எடுத்த நிலையில், தனக்கு ஆதரவான ‘ஸ்லீப்பர் செல்’களாக எம்எல்ஏக்கள் பழனிசாமி அணியில் உள்ளனர் என பகிரங்கமாக அறிவித்தார் தினகரன்.
அணிகள் இணைப்புக்கான பணிகள் நடந்தபோது, இருதரப்பையும் கடுமையாக விமர்சித்த அவர், அணிகள் இணைந்த 21-ம் தேதியில் இருந்து தற்போதுவரை அடையாறு இல்லத்தில் இருந்து வெளியில் வரவில்லை.
காய்ச்சல் காரணமாக ஒய்வில் இருந்த அவரை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள்தான், 21-ம் தேதியில் இருந்து தற்போது வரை, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அணிகள் இணைப்பு தொடர்பாகவோ, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவோ எந்த கருத்தையும் தினகரன் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த 22-ம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
தொடர்ந்து 23-ம் தேதி புதுச்சேரி செல்வதாகவும், செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தினகரன் தரப்பில் செய்தி வெளியானது.
ஆனால், இதுவரை அவர் எங்கும் செல்லவில்லை. அதே நேரம், நேற்று முன்தினம், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியை மட்டும் தன் வீட்டில் தினகரன் சந்தித்தார். கூடுதலாக ஒரு எம்எல்ஏ இணைந்த நிலையிலும் கூட, தனக்கு பெருகும் ஆதரவு தொடர்பாக எந்த தகவலையும் தினகரன் தெரிவிக்கவில்லை. இவ்வாறாக கடந்த 21-ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கும் மேலாக தினகரன் மவுனமாக இருப்பது, எதிர் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், தொடர்ந்து கடந்த 4 நாட்களாக எதிர்தரப்பு ஆதரவு நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களை அந்த பதவிகளில் நியமித்து வருகிறார்.
எந்த விவகாரத்தையும் அதிரடியாக அணுகும் தினகரன் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நமது கப்ஸா நிருபரின் தொடர்ந்தவற்புறுத்தலின் பேரில் நமது செய்தித்தளத்திற்கு அளிக்காத பேட்டியில் தினகரன் கூறியதாவது: நன் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது. குறைந்தது 80 எம்எல்ஏக்கள் என்னிடம் வரும்போது தான் வெளியே வந்து எல்லோரையும் சந்திப்பேன். சின்னம்மாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி இனிமே டெட் பாடி தான் என்றார். எம்எல்ஏக்களை உங்கள் பக்கம் இழுக்க ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறீர்களா என்று நமது கேள்விக்கு “முதலில் வரும் 30 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி, அடுத்த ஊழலில் ஊக்க போனஸ் தரலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks