Credit:  Veera Vetri Pandiyan

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் தற்போது ஊடகங்களில் அதிகம் உலாவரும் பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி… யார் இந்த குருமூர்த்தி? எதற்காக அதிமுக உட்கட்சி விவகாரங்களில் சமீப காலமாக அதிகம் தலையிடுகிறார்? இவர் ஒரு பட்டய கணக்காளர், காவிபரிவாரங்களின் அமைப்பான RSS மற்றும் மோடியின் ஆலோசகர் என்ற பொது விவரங்களை எல்லாம் தாண்டி சில இவரை பற்றிய உண்மைகளை ஊரறிய செய்யவேண்டிய நேரமிது.

2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலா நட்பில் விரிசல் ஏற்பட்டு கார்டனை ஆட்டைய போட காவி கும்பல் ஒரு சதி வேலையை மோடி, சோ ராமசாமி மற்றும் தெஹெல்கா பத்திரிகையின் ஊடாக செய்தது, பின்னர் சசிகலா கார்டனை பிரிந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கார்டனில் ஜெயாவிற்காக நியமிக்க படுகின்றனர், பின்னரே ஜெயா உடல் நிலையில் ஒரு அசாதாரண மாற்றம் நிகழ்கிறது. நினைவிருக்கிறதா ?

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் , இந்த சோ ராமசாமியின் நாரதர் வேலை ஆரம்பித்தது…. 2011 ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை மற்றும் போக்கில் ஒரு வித அதீத மாற்றம் ஏற்பட தொடங்கியது அதன் விளைவாக ஈழம், மூவர் விடுதலை போன்ற தமிழர் நலன் சார்ந்த விவகாரத்தில் ஜெயலலிதா கொண்ட நிலைப்பாடு இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் எரிச்சலை உண்டாக்கியது … சும்மா விடுமா இந்த கேடுகெட்ட பார்ப்பனீசம்??? ஜெயாவை சுற்றியிருந்த தமிழர் அரணை உடைக்க தொடங்கியது .. அதற்காக ஏவப்பட்ட முதல் அம்பு தான் பிப்ரவரி 04 2012 ல் தெகல்கா பத்திரிக்கையின் மூலம் சசிகலாவுற்கு எதிரான ஒரு ஜோடிக்கப்பட்ட கட்டுரையை வெளிவிடுகிறது இந்திய உளவுதுறை. அந்த கட்டுரையில் சசிகலா ஜெயாவிற்கு உணவில் slow poison கலந்ததாக ஒரு கட்டுகதையை கிளப்பிவிட்டது.
அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும் ஜெயவிற்கும் இணக்கமான சூழ்நிலையில்லை எனவே இந்திய உளவு துறை ஜெயாவின் நம்பக கதாபாத்திரங்களின் ஒருவரான சோ இராமசாமியின் ஊடாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் உதவியுடன் மன்னார்குடி குரூப்பை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றி சோ ராமசாமியின் நட்பு வட்டத்தை கார்டனில் நிறுத்துகிறது…. அப்போது தான் ஜெயாவின் தனி பாதுகாவலர் முதல் சமையல்காரர் வரை அனைவரும் மாற்றப்படுகின்றனர் மேலும் சில குஜராத்தி மருத்துவர்களும் , செலியர்களும் மோடியின் மூலமாக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

…. இதன் பிறகே ஜெயாவின் உடல்நிலையில் பல வித மாற்றங்கள் நிகழ்ந்தன … பிறகு பஜக விற்கும் ஜெயாவிற்கும் நடந்த முரண்கள் வேறு இருக்கிறது … அப்போதைய காலகட்டத்தில் போயஸ் கார்டனில் மாற்றப்பட்ட நபர்கள் யார் யார் அவர்களின் பின்புலம் என்ன ? இப்போது அவர்கள் எங்கு உள்ளார்கள்?

சரி இப்போ விஷயத்திற்கு வருவோம்.. ஏன் ஜெயலலிதா மீது இந்த காவிகளுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி ???
நினைவிருக்கிறதா 2004 ஆம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்து சிறையில் அடைத்தது ? சும்மா விடுமா காவி பரிவாரங்கள் வட இந்திய முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது, தமிழகத்தை தவிர … தமிழகத்தில் பல தரப்பட்ட மக்களும் அரசின் இந்த தைரியமான முடிவை வரவேற்ற போது ஒரு சில பார்ப்பனிய ஊடகங்கள் மட்டும் எதிர்த்தன அதில் முக்கியமான நபர் தான் இந்த “ஆடிட்டர் குருமூர்த்தி”.

அப்போது சங்கர ராமன் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு துறை சுப்பரிண்டன்ட் பிரேம்குமார் தலைமையில் விசாரித்து கொண்டிருக்கையில், இதே ஆடிட்டர் குருமூர்த்தி தான் வழக்கை திசை திருப்ப உண்மைக்கு முரணான பல தொடர் கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார். இவருக்கும் சங்கர ராமன் கொலைக்கும் என்ன சம்மந்தம் என்று சந்தேகமடைந்த காவல் துறை குருமூர்த்தியை விசாரிக்க ஆரம்பித்தது முன்னுக்கு பின் பல முரணான விடயங்களை குருமூர்த்தி கூறியதால் காவல் துறை இவர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி IPC 176,179,191 மற்றும் 193 சட்டத்தின் படி குருமூர்த்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அன்று இந்த குருமூர்த்தி தப்பி ஓடி மும்பையில் காவிகளின் உதவியோடு ஒளிந்து கொண்டார்… பிறகு இந்திய காவிகளின் உதவியோடு இந்த வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டு திசை மாறியது வேறு ஒரு கதை..

அன்றிலிந்து ஜெயலலிதாவை ஒழித்து கட்டி அதிமுகவை ஆட்டைய போடுவதே காவிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்து வந்தது அதற்கு இது நாள் வரை சோ ராமசாமி ஒரு துருப்பாக இருந்து வந்தார் இப்போது அதே வேலையே இந்த ஆடிட்டர் குருமூர்த்தி சோ வின் துக்ளக் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செவ்வனே செய்கிறார்.

The contents of this article are the view of Veera Vetri Pandiyan 

பகிர்

There are no comments yet