2016 செப்டம்பர் மாதம் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர். அவரது உடல் நிலை பற்றிய சகல தரவுகளையும் தெரிந்து கொண்ட பாஜக அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தில் கணிசமான இடங்களை கைப்பற்றும் நோக்கோடு களமிரங்கியது. இதற்காக அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் களமிரக்கப்பட்டனர்.ஆனால் அந்த முயற்சி நினைத்த அளவு வெற்றியைக் கொடுக்காமல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் முதன் முதலாக பாஜக கைப்பற்றியது பன்னீர்செல்வத்தை. அவர் பாஜகவின் வேலைத் திட்டத்தில் பணி செய்கிறார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் அவரால் 9 எம்.எல்.ஏக்களுக்கு மேல் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை கைப்பற்ற முடியவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட கெடுவை நிறுத்திக் கொண்ட பாஜக எடப்பாடி பழனிசாமியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது. சசிகலாவை அதிமுகவில் எவர் ஒருவரும் எதிர்க்கவில்லை. முதல்வர் பதவி பறிபோனதும் சசிகலாவை எதிர்த்து பன்னீரை களமிரங்கச் சொன்னதும் பாஜகதான். எடப்பாடி பழனிசாமி சசிகாலவின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. அவரை சசிகலாவுக்கு எதிராக மாற்றி நிறுத்தியது பாஜக.

சசிகலா தரப்பான தினகரன் அணியினர் பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்த போதும் எடப்பாடி பழனிசாமியை எங்கும் விமர்சிக்கவில்லை. சசிகலாவின் மொத்த குடும்பத்தையும் அதிமுகவை விட்டு விலக்கி வைக்கவேண்டும். என்பது பாஜகவின் உத்தரவு அந்த உத்தரவை எடப்பாடியை வைத்து செயல்படுத்த போய் அதிமுக தினகரன் தலைமையில் கடுமையாக பிளவு பட்டுள்ளது. தினகரனை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பன்னீர்செல்வத்தை துரோகி என்கிறார்கள். சசிகலாவை நீக்கம் செய்து விட்டு பாஜகவை கைப்பற்றிக் கொள்வது என்கிற பாஜகவின் திட்டம் அத்தனை எளிதில் நடக்கக் கூடியதல்ல. “இரு அணிகளும் இணைந்தால்தான் இரட்டை இலை கிடைக்கும்” என்ற குரல் தேர்தல் கமிஷனின் குரல் அல்ல. பாஜக தலைவர்களின் குரல். அதற்காக பாஜக சென்னையில் நடத்திய பஞ்சாயத்துகள் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கும் தகவல் பரவ அவர்கள் பாஜகவின் இந்த தலையீட்டை விரும்பவில்லை.

இதுவரை அதிமுக, பாஜக கூட்டணி உருவாகவில்லை. ரகசியக் கூட்டணிதான். ஆனால் இக்கூட்டணி நாளை வெளிப்படையாக வரும் போது அதிமுக சுக்குநூறாக சிதறி விடும் அளவுக்கு எலிப்பொறிக்குள் சிக்கியிருக்கிறது. அதிமுகவில் இருக்கும் தலித்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களிடம் இப்போது வரை அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் பாஜக கூட்டணியை மறுத்தே வருகிறார்கள்.இதை எத்தனை நாளைக்கு மறுக்கவும் மறைக்கவும் முடியும் எனும் நிலையில். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தால் தினகரனை கட்டுப்படுத்த இயலவில்லை. இதுவரை 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்திருக்கும் தினகரனிடம் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.
ரெய்டுகள், கைதுகள், பகிரங்க மிரட்டல்கள் என பாஜகவின் அனைத்து அச்சுறுதல்களையும் கடந்து தினகரனுக்கு இத்தனை எம்.எல். ஏக்களின் ஆதரவு இருக்கிறதென்றால் அதிமுகவைக் கைப்பற்றும் பாஜகவின் கனவு இனி அத்தனை எளிதில் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

மற்ற ஆதாரங்கள்Tamilarasiyal
பகிர்

There are no comments yet