Credit: Allanji

இதுதான் உண்மை.
பன்னீரால் அதிகளவில் எம்எல்ஏக்களை திரட்ட முடியாதென்பதும் யாரும் அவர் பின்னால் வர தயாரில்லை என்பதும் முன்பே அறிந்ததுதான் ஆனால் ஊடகங்கள் அவரை ஓவர் பில்டப் செய்து பெரிய செல்வாக்கு உள்ளவரைப்போல காட்டியது வெறும் காற்றடைத்த பலூன் அவரென்பதை இப்போது உணர தொடங்கியிருக்கிறார்கள் அதிமுகவினர்.. தினகரன் ஆதரவு 23ஐ தாண்டிக்கொண்டிருக்கிறது..
இன்னும் கூடும் ..
பாஜகவின் ராஜகுருக்கள் தீட்டிய திட்டம் படுதோல்வியில் ..ஆரம்பம் முதலே சசிகலாவை வெளியேற்றிய கட்சி இல்லாமல் போகவே வாய்ப்பென்று சொல்லிவருகிறோம்..
..
122 ஐ தாண்டுகிறது
எடப்பாடி ஏதோ நினைக்க நடந்ததென்னவோ வேறு.. தமிழகத்தின் அரசியலை அல்ல .. தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை நாடித்துடிப்பை அறிந்திருந்தால் பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்ந்திருப்பார் .. மத்திய அரசாலோ பாஜகவாலோ ஒன்றும் செய்யமுடியாது காரணம் மேஜிக் நம்பர் சசிகலாவிடம் இருந்தது கடைசியில் பாசிசத்தின் சூழ்ச்சிக்கிரையாகி முழிக்கிறார்.. விழிபிதுங்கி நிற்கிறார்
..
அதைவிட பாஜகவினரின் சமீபத்திய பேச்சுகள் அவர்களின் இயலாமையை காட்டுகிறது.. அவர்கள் தீட்டிய திட்டம் தமிழகத்தில் பல்லிளிக்கிறது என்றவுடன்…. தினகரன் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிபோகுமென எச்.ராசா மிரட்டுகிறார்.. முதவில் கர்நாடக எடியூரப்பாவிற்கெதிராக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தபோது நடந்ததை அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ராசா படித்துபார்க்கட்டும் அவர்கள் செய்தது அவர்களுக்கு வினையாகிறது..
பொன்னரும் தமிழிசையும் சு.சுவாமியும் திமுக கொள்ளைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறதென ஒப்பாரி வைக்கிறார்கள் .. கவர்னர் முன் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டதைப்போல முழிக்கிறார்.
..
புறவழியாக வரவேண்டுமென்றால் எப்போதே வந்திருக்கமுடியும் அதை திமுக எப்போதும் செய்ததில்லை.. மக்களின் பெரும் ஆதரவோடு மட்டுமே ஆட்சி செய்திருக்கிறது..
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகியும் ஜெயாவும் அடித்துக்கொண்டபோது
ஆர்எம் வீரப்பன் ஜானகியை பின்துணைக்க கோரிய போதுகூட தலைவர் அவர்களாக முடிவு செய்துக்கொள்ளட்டுமென விட்டுவிட்டார் .. ஜானகியை சிறுதுகாலம்,ஆதரித்து ஜெயலலிதாவை இல்லாதாக்கி இருக்கலாம் அதை செய்யவில்லை காரணம் .. எந்த நிலையிலும் திராவிட கட்சிகளை தவிர வேறு யாரும் வந்துவிட கூடாதென்பதில் கறாராக இருந்தார் அன்றைக்கு காங்கிரஸ் கொஞ்சமே மெச்சப்பட்ட நிலையில் இருந்தது..
யார் எதிராக வேண்டுமென்பதில் திமுக எப்போதுமே சரியாகவே,இருந்திருக்கிறது.. இப்போது ஆடும் ஆட்டத்தின் முடிவில் தெரியும் பாஜகவும் பாஜகவிற்கு துணைப்போனவர்களின் பரிதாபகர நிலை..
..
அதிமுக என்றால் அது விரும்புகிறோமோ இல்லையோ அது #அத்தாச்சி தலைமைதான் என்பது மெல்ல தெளிய தொடங்கியிருக்கிறது…
அதுதான் உண்மையும் கூட..
..
#Dissolve_the_TNGovt

பகிர்

There are no comments yet