Credit: தோழர். ஆலஞ்சி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பன்னீரும் எடப்பாடியும் இணைந்த பிறகு கூடிய கூட்டம்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பாண்டியில் என்றவுடன் பதட்டத்தோடு எத்தனைபேர் ஆதரவு தருகிறார்கள் என்பதை கணக்கெடுக்க நடத்தப்பட்டது பாவம் எழுபது பேர்களுக்கு மேல் தாண்டவில்லை.. ஏறக்குறைய 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் வரவில்லை.. விரக்தியின் வெளிபாடு இது..
அதிகாரப்பசியில் தன்மானம் இழந்து கட்சியை காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகத்தை ஒட்டுமொத்தமாக கட்சியை அடகுவைத்து தங்களை காத்துக்கொள்ளும் அயோக்கியத்தனத்தை விரும்பாதவர்கள் ..
சசிகலாவின் ஆதரவாளர்கள் என்பதை காட்டிலும் எடப்பாடியின் பன்னீரின் நடவடிக்கையை விரும்பாதவர்களாக கணக்கில் கொள்ளலாம்..
..
இதில் அதிமுககாரனைவிட (பன்னீர்-எடப்பாடி) உண்மையில் பதறுவது பாஜகதான்..
பொன்னர் திமுக புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது.. என்கிறார்
ஸ்டாலினை தகுதிநீக்கம் செய்யவேண்டுமென தமிழிசை உளறுகிறது.. தினகரன் எம்எல்ஏக்கள் பதவி பறிபோகுமென எச்.ராசா .. இவர்கள் பாஜகவைப்பற்றி கவலைப்படுவதைவிட அதிமுகவைப்பற்றிதான் அதிகம் கவலைப்படுகிறார்கள் ..உண்மையான அக்கறையில் அல்ல இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பே கிடைக்காது துடைத்தெறியப்படுவோம் பாசிசத்தின் அஜந்தா செயல்படுத்த முடியாதென்று தெரிந்துதான் இவர்களிடம் பதட்டம் அதிகரிக்கிறது..
..
கவர்னர் இன்னமும் அமைதி காப்பது அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு எவ்வளவுதான் முட்டுகொடுத்தாலும் நிற்காது சரிந்துவிடும் என்பதறிந்து காலம் தாழ்த்துவதில் பலனில்லை
எதையாவது செய்து பாஜகவை மலரவிட நினைத்தால் இங்கு நிறைவேறா ஆசையாய் போகும்..
..
இந்த அறிவிலி கூட்டத்தை நீண்டநாட்கள் அலங்கரிக்க முடியாது கொள்கை அடிப்படையில் வந்தவர்கள் அல்ல இவர்கள்.. கோடாரியின் கவர்ச்சி கண்டு.. கொஞ்சம் காசு பார்க்கலாமென்று வந்த கூட்டம்.. இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழந்து நிற்கிறார்கள்.. குழிபறித்து முதுகில் குத்தி .. கட்சியை தொடங்கிய மகோரா வின் (எம்ஜிஆர்) கட்சி..துரோகத்தாலேயே வீழ்கிறது.. ஜெயா எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார் என்னை முதல்வராக்குங்களென ராஜீவிற்கு கடிதம் எழுதினார்.. இப்போது பன்னீரின் எடப்பாடியின்.. துரோகம்.. முடிவுரை எழுத போகிறது.. என்ன தான் தகிடுதத்தம் செய்தாலும்..எடப்பாடியோ பன்னீரோ கரைசேரமுடியாது..
..
There are no comments yet
Or use one of these social networks