Credit: Sekar Palanisamy

நீட் எனும் கொடிய அரக்கன்..

கல்வி…இது ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த .உண்டு. அதனை செம்மை படுத்தி..இன்று கல்விபயிலாத வீடே இல்லை என்கிற நிலையை கிட்டத்தட்ட அடைந்துவிட்டோம்..

எப்படி சாத்தியமாயிற்று? ஒரு வேளை உணவு கொடுத்து..ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் யூனிபார்ம் அணிய வைத்து..சாதிமத பாகுபாடின்றி..பள்ளி கல்வியை கொடுத்த தலைவர்கள் இங்கேதான் முதன்முதலாக தோன்றினார்கள்..

பின்னர் படிப்படியாக மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி என்கிற நிலையிலும் நடுத்தர மக்கள் கடன் உடன் பட்டு பிள்ளைகளை படிக்க வைத்தார்கள்..பெண்களை படிக்க வைக்க எவ்வளவோ எதிர்ப்புகள் அந்த காலத்தில்.. அதனையெல்லாம் தாண்டி..பகையை வளர்த்துகூட முற்போக்கு எண்ணத்தில் வளர்ந்த குடும்பங்கள் ஏராளம்..

இந்த சூழலிலும் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை..குடுமப வறுமை சூழ்நிலையே முதற்காரணம்..கூலி வேலைக்கு சென்றுவந்தால் அன்று அந்த வீட்டில் அடுப்பு எரியும்..

அத்தனையும் மாற்றி.. பல கல்லூரிகள் தோன்றின..அதில் படிக்கும் பிற சாதி குழந்தைகளை போன்றே நமது குழந்தையும் படிக்கட்டும் என்று ஐந்து குழந்தைகள் உள்ள வீட்டில் ஒரு பிள்ளையையாவது படிக்கவைக்க பெற்றோர்கள் துணிந்தனர்..

இப்படித்தான் படிப்பு எல்லார் வீட்டிலும் சரஸ்வதியாக குடிபுகுந்து மாற்றத்தை கொண்டுவந்தது…

சரி..நீங்கள் பின்தங்கிய அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரை பற்றியே பேசுகிண்றீர்களே..ஏன் உயர் சாதியில் ஏழைகளே இல்லையா/ அவர்களுக்கு அந்த சாதி ஒதுக்கீடு ஏன் கொடுக்க முடியாதா என்கிற கேள்வியும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே..

ஆனால் உயர் சாதியினரின் குடும்பங்களை விட பலமடங்கு பின்தங்கி இருக்கின்றனர் பிற சாதியினர் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது..

நீட் தேர்வின் குறைகள் ஏராளம்..அது சதியின் ஒட்டுமொத்த உருவம்..மேல்சாதிக்காரர்களுக்கு சாதகமாக உருவான தேர்ச்சி முறை..

பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்து..அல்லது சைக்கிள் மிதித்து கொலைப்பட்டினியில் பள்ளிக்கு சென்று மாநில கல்வி முறையை நன்கு பயின்று மீண்டும் வீடு வந்து..கழனி வேலை..அல்லது தச்சு வேலை..அல்லது நெசவு வேலையையும் செய்து அயர்ந்து பள்ளிப்பாடங்களை படித்து..(முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்)

அப்படிப்பட்ட கிராமப்புற..தாழ்த்தப்பட்ட அலல்து பின்தங்கிய வகுப்பினரின் பிள்ளைகள்..போராடி தேர்ச்சி பெற்ற காலமெல்லாம் மாறி..இன்றைக்கு மாநில அளவிலே தேர்வு பெறுகின்றார்கள்..

அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு மத்திய அரசு பாடத்திட்டத்தை உருவாக்கி..இவர்களை கட்டுப்படுத்த இதுவே தக்க முறை என்று உயர் சாதிவகுப்பினரால்..உருவாக்கப்பட்டதுதான்.

இந்த நீட் தேர்வு முறை..

காங்கிரஸ் அரசாங்கம் இதனை சிந்திக்க கூட இல்லை..ஆனால் இன்றைய பா ஜ க அரசு..உயர் சாதிக்கான அரசு என்பது அனைவராலும் ஒப்புக்கொண்ட நிலையில் வேண்டுமென்றே காத்திருந்து புகுத்தப்பட்டதுதான்

நீட் தேர்வு முறை

அதிலும் கூட குஜராத் மாநில பள்ளிப்பிள்ளைகளுக்கு சுலபமான கேள்வித்தாள்..பா ஜ க ஆளும் மாநிலங்களில் தேர்வில் காப்பியடிக்க அனுமதித்தார்கள்..ஏன்? அவர்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறட்டும் என்றுதான்..

ஆனால் இங்கே போட்டிருக்கின்ற சட்டையை கூட கிழித்து பார்த்து அனுப்பினார்கள்..தேவையற்ற கேள்விகளை கேட்டு..வடிகட்டினார்கள் சதிசெய்து..கடுமையான கேள்விகள் இங்கே கேட்க திட்டமிட்டு மத்திய அரசாங்கம் சதி செய்தது..

பாதிக்கப்பட்ட பிள்ளைகள்..அனிதாவை போன்று எதிர்பார்த்தார்கள் நீதி கிடைக்கும் என்று..நீதியரசர்கள்..யார்?

கேரளா கவர்னரை போன்று சகாயம் பெற துடிப்பவர்கள்..அவ்வளவு சுலபமாக நீதியை வழங்கிவிடுவார்களா என்ன?

மேல்வகுப்பினர் தங்கள் பிள்ளளைகளுக்கு தினமும் நீட் தேர்வுக்கான டியூசன் ஏற்பாடு செய்து மோல்ட் செய்து அனுப்பினார்கள்..

ஆனால் இங்கே அபப்டி அல்ல..டியூசன் அனுப்பி வைத்து மோல்ட் செய்கின்ற அளவுக்கு வசதிவாய்ப்புகள் இல்லாத விவசாயிகள்..பின்தங்கிய வகுப்பினர்..தாழ்த்தப்பட்ட வகுப்பினர்..இப்படித்தான் சூழல் இருக்கின்றது..

மேல்நாடுகளில் வருகின்ற பணம்…மேல்சாதிக்காரர்களுக்கு உதவும் சாமியார்கள்..இப்படி வடக்கே உள்ளவர்களுக்கு எவ்வளவோ ஆதரவுகள்..

இங்கே தமிழகத்தில்..பதவி வெறி பிடித்த பன்னாடைகள்..நீட் தேர்வை வாயில் உதடு மட்டும் எதிர்ப்பது போல பாவனை செய்து..தங்களது சொத்துக்களை பாதுக்காக்க அமைதி காத்தனர்..

ஓராண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு எனறு சொல்லிவிட்ட மறுநாளே..வடக்கே உள்ள எம் பிக்கள் எதிர்ப்பை தெரிவிக்க….

நோ நோ..நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கமுடியாது என்று சொல்லிய சொல்லில் அந்தர்பல்டி அடித்தார்கள்..

பல முறை பிரதமரை சந்திக்க சென்றவர்கள்…ஒரே ஒருமுறையாவது நீட் தேர்வை பற்றி பேசியிருந்தால்..

இன்றைக்கு அனிதா என்கிற அப்பாவி பெண்..அறிவு பெண் இறந்திருக்க மாட்டார்..

பதவி வெறி பிடித்த அரசியல் தலைகள்..இந்த அனிதா வின் மரணத்துக்கு காரணம்..

மேல்சாதி அரசாங்கம் தங்களது சுயரூபத்தை காண்பிக்க திணித்த நீட் தேர்விற்கு அப்பாவி அறிவு பெண் மரணத்துக்கு காரணம்..

தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகள்..உருவாக்கியது நமது அரசாங்கங்கள்..ஆனால் வடக்கே உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை வெகு குறைவே..

நமது வரிப்பணத்தில் உருவான மருத்துவக்கல்லூரிகளில் எங்கிருந்தோ வந்தவர்கள் படிக்க நமது பிள்ளைகளை காவு கொடுக்கின்றோம்..

இதற்கு மேலே என்ன சொல்ல..

நமக்கு என்று ஒரு தலைவன் வெளியே வரணும்…நமக்காக போராடனும்..நமது மாநில உரிமைக்காக குரல் கொடுக்கணும்..நமது உரிமையை கேட்டுப்பெறனும்.நாம் செலுத்துகின்ற வரியின் உரிமையை போராடியேனும் பெறணும் ..

யார் அந்த தலைவன் என்கிறபோது..இறைவா நீதான் காட்டணும் என்கிற கோரிக்கையை வைத்து..மனதை தேற்றிக்கொள்ளனும்..

அனிதாவின் மரணத்துக்கு பின்னரேனும் மாணவர்கள் விழ்த்துக்கொள்ளணும் ..இல்லையேல் தற்கொலைகள் தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகும்ம்

ஆழ்ந்த அனுதாபங்கள்..அனிதாவுடன் இந்த அனுதாபம் முடிவுக்கு வரணும்..இதுவே நமது கோரிக்கை..!!

பகிர்

There are no comments yet