வண்டலூர்: அ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மதுரை, கடலூர், திருவாரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கடந்த வாரம் வண்டலூர் அருகே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. இரு அணிகள் இணைந்தப் பிறகு நடந்த முதல் கூட்டமான அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டிப் பகுதியில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று காலை அந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரை திடீரென்று வெடித்ததால், தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால், அந்தப் பகுதி சிறிது நேரத்துக்கு பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து ஒரு டெட் பாடி ஆதரவாளர் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது, இது கண்டிப்பாக ஓபிஎஸ்சின் வேலையாகத்தான் இருக்கும். ஏற்கனவே செத்துப்போய் டெட் படியாக நடமாடிக்கொண்டிருக்கும் என் தலைவரை அழிக்க ஓபிஎஸ் சதி செய்து முதல்வராக பார்க்கிறார். என் ஆயாவின் ஆவி அவரை சும்மா விடாது என்றார்.

பகிர்

There are no comments yet