சென்னை: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண், மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, இந்திய வர்த்தகத்தை உலக அளவில் பேச வைத்தவர். நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பா.ஜ.,வில் மூத்த தலைவர்களாக இருக்கும் பலருக்கும் இது, அதிர்ச்சிகரமான தகவலாகத்தான் இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும் இவரை வைத்து நிறைவேற்ற போட்டிருக்கும் திட்டங்கள் பெரிசு.

தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.,வுக்கு இன்னொரு தமிழ் பெண்ணான நிர்மலா சீதாராமனைப் நியமிப்பதன் மூலம், தமிழகத்தில் கட்டாயம் பா.ஜ., படு வேகமாக வளரும் என கணக்குப் போட்டிருக்கின்றனர் மோடியும், அமித் ஷாவும்.அதனாலேயே, அமைச்சர் பொறுப்பை நிர்மலா, ராஜினாமா செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டால், தமிழக பா.ஜ., கட்டாயம் எழுச்சி பெறும் என்று சொல்லும், தமிழக பா.ஜ.,வினர், ஒருவேளை, தமிழக பா.ஜ., தலைவராக்காவிட்டால், தமிழக நிரந்தர கவர்னராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டால், தேர்தல் நெருக்கத்தில் நிர்மலா சீதாராமனையே, பா.ஜ., முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்தக் கூடும். இப்படி பல்வேறு சிந்தனைகளோடு, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜினாமா செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வின் மேலிடப் பார்வையாளராக நிர்மலா சீதாராமனை நியமித்து, அவர் வழிகாட்டலில், தமிழக பா.ஜ., இயங்குவது போல செய்யவும் மத்திய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.எப்படி இருந்தாலும், நிர்மலாவை, தமிழத்தை நோக்கி திருப்பி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இன்று காலை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் சில முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். கூடுதல் பொறுப்பாக வேண்டும் என்றால் தமிழகத்தின் பொறுப்பாளர் பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை சொல்லியுள்ளார்கள். அதை நிர்மலா சீதாராமனும் ஆமோதித்துள்ளார். இதனால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார். இதுகுறித்த தகவலையும் பிரதமர் அலுவலகத்துக்குச் சொல்லியுள்ளார். ஆனால், தமிழகத்தின் பொறுப்பாளர் என்ற பதவியை நிர்மலா சீதாராமனிடம் கொடுக்கும் முடிவில்தான் மத்திய அரசு உள்ளதாகத் தெரிகிறது.

பகிர்

There are no comments yet